"களவாணி" சற்குணம் இயக்கத்தில் அடுத்து உருவாகி இருக்கும் திரைப்படம் "வாகை சூடவா", இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.
பாரதிராஜா, பாக்யராஜ், எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.பி.ஜனநாதன், ஆர்.கே.செல்வமணி, தங்கர்பச்சான், பிரபுசாலமன், அமீர், சிம்புதேவன், விஜய், "பசங்க" பாண்டிராஜ், சுசீந்திரன் என கோலிவுட் இயக்குநர்கள் மொத்தபேருடன் ஏ.எல்.அழகப்பன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா உள்ளிட்ட பல தயாரிப்பாளர்களும் கலந்து கொண்ட இவ்விழாவில் கடைசிவரை, இயக்குநர் சற்குணத்திற்கு முதல்பட வாயப்பு தந்த தயாரிப்பாளர் நசீர் மேடை ஏற்றப்படவில்லை.
"வாகை சூடவா" இயக்குநர் சற்குணத்திற்கு "களவாணி", ஹீரோ விமலுக்கு "களவாணி", "எத்தன்" என இரண்டு படங்கள் தந்த நசீர் மேடை ஏற்றபடாதது கண்டு பின்னர் பிரஸ் மீட்டில் கேட்டபோது, இயக்குநர் சற்குணம் அவர் விழாவுக்கு வந்ததே எனக்கு தெரியாது என்றார்.
அவரிடமிருந்து மைக்கை வாங்கி பேசிய இப்படத்தின் மக்கள் தொடர்பாளர் நிகில், களவாணி படத்தயாரிப்பாளர் நசீர், இவ்விழாவிற்கு அழைக்கும்போது, என்னை மேடைக்கு அழைக்க வேண்டாம் என கேட்டு கொண்டார்.
அதனால் அழைக்கவில்லை என்று பூசி மொழுகினார். அப்படியென்றால் அதேமேடையில், மேடை ஏறுவதில்லை, பேசுவதில்லை எனும் சபதம் கொண்டிருக்கும் பாரதிராஜாவை மட்டும் வற்புறுத்தி பேச வைத்தவர்கள், நசீரை மட்டும் மறந்தது, மறுத்தது ஏனாம்...?! வாகைசூட இருப்பவர்களுக்கே வெளிச்சம்!
0 comments:
Post a Comment