பக்கத்து வீட்டு பெண் போல இயல்பான நடிப்பாலும், தன்னுடைய புன்னகையாலும், ரசிகர்கள் மனதில் ஒட்டிக் கொண்டவர் புன்னகை இளவரசி சினேகா.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வரும் சினேகா, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணி நடிகையாக இருந்தார். ஆனால் இப்போது கரை ஒதுங்கி நிற்கும் நடிகைகளின் பட்டியலில் சேர்ந்திருக்கிறார்.
தமிழில் கடைசியாக போலீஸ் அதிகாரியாக நடித்த பவானி படத்திற்கு பிறகு வேறு படங்களே இல்லை. இதுகுறித்து சினேகாவிடம் கேட்டால், கடவுள் அருளால் நல்ல கேரக்டர்கள் பலவற்றில் நடித்து விட்டேன்.
அடுத்து என்ன படம், எப்படி பண்ணலாம் என்று தேர்வு செய்து வருகிறேன். நிறையபேர் வந்து கதை சொன்னாங்க, ஆனால் ஒரு கதையும் மனதில் நிற்கும்படியாக இல்லை.
நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். 10வருடமாக தமிழ் சினிமாவில் இருந்து வந்தாலும், எனக்கு ஒரு சின்ன ஆசை இருக்கிறது.
அது என்னானா, மொழி, சந்திரமுகி போன்ற படங்களில் நடிக்கணும், டைரக்டர்கள் பாலா, கவுதம் வாசுதேவ் மேனன், மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரது டைரக்ஷனில் எப்படியாவது ஒரு படம் பண்ணிவிட வேண்டும் என்று தன்னுடைய சின்ன ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழில் கைவசம் படங்கள் ஏதும் இல்லாததால் தற்போது தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் ராஜன்னா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் கைவசம் படங்கள் ஏதும் இல்லாததால் தற்போது தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் ராஜன்னா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கூடவே ஓய்வு கிடைக்கும் போது தனது உடலை இன்னும் கொஞ்சம் ஸ்லிம்மாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
0 comments:
Post a Comment