விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் செய்யப்பட்ட ரஜினியின் கோச்சடையான் படத்தின் டீசரை 24 மணிநேரத்தில் 10லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். எந்திரன் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கோச்சடையான்.
3டி அனிமேஷன் படமாக அவதார், டின்டின் போன்ற ஹாலிவுட் படங்களை போன்று இப்படம் தயாராகியுள்ளது. ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார்.
தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்துள்ளார். இவரோடு சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெரப், ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து தற்போது கிராபிக்ஸ் சேர்ப்பு உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
ரஜினி உடல்நிலை சரியில்லாமல் போய் பின்பு அதிலிருந்து மீண்டு நடித்துள்ள படம் என்பதாலும், எந்திரன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு வெளிவரும் படம் என்பதாலும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் எப்போது வெளிவரும் என்று மிகுந்த ஆவல் ஏற்பட்டது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று கோச்சடையான் படத்தின் அதிகாரப்பூர்வ முதல் டீசரை வெளியிட்டார் சவுந்தர்யா.
பிரமாண்ட அரண்மனை அதனைத்தொடர்ந்து குதிரை ஏற்றத்தில் ரஜினி வருவது போன்றும் ருத்ர தாண்டவம் ஆடும் சிவன் போன்று காலை உயர்த்தியபடியும் ரஜினியின் பல்வேறு காட்சிகள் அந்த டீசரில் இருந்தது. மேலும் இப்படத்தில் ரஜினியை மிகவும் இளமையாக காட்டியுள்ளனர்.
இந்த டீசர் வெளியான 24 மணிநேரத்தில் சுமார் 10 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். தொடர்ந்து இன்னும் ஏராளமானபேர் ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment