இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தன்னுடைய நீண்டகால தோழியும், பாலிவுட் நடிகையுமான இஷா சர்வானியை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்.
சமீபத்தில் நடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பைனலில் இலங்கை அணியை வீழ்த்தி, இந்திய அணி கோப்பையை கைப்பற்றி 28ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சாதனை படைத்தது. இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை(21) வீழ்த்தினார் இந்திய வேகபந்து வீச்சாளர் ஜாகீர் கான்.
உலக கோப்பையை கைப்பற்றியது மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியது என்று மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் ஜாகீர். இந்த சந்தோஷத்துடன் இன்னொரு சந்தோஷமும் ஜாகீருக்கு சேர்ந்திருக்கிறது.
அது அவருடைய திருமணம். ஜாகீர் கான் தன்னுடைய நீண்டகால தோழியும், பாலிவுட்டின் பிரபல நடிகையுமான இஷா சர்வானியை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி, இந்தியாவில் சுற்றுபயணத்தை முடித்து கொண்டு தங்களது நாட்டிற்கு திரும்பும் போது இருஅணி வீரர்களும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர்.
அப்போதுதான் ஜாகீரும், இஷா சர்வானியும் முதன்முதலில் சந்தித்து கொண்டனர். பார்த்த உடன் இருவருக்கும் காதல் வந்துவிட்டது.
அதன்பின்னர் இருவரும் ஒன்றாக ஊர் சுற்ற ஆரம்பித்தனர். இரண்டு ஆண்டுகளாக இவர்களுக்குள் தொடர்ந்த இந்த உறவு 2007ம் ஆண்டுக்கு பிறகு முறிந்தது. அதன்பின்னர் சில ஆண்டுகளாக இருவருக்குமிடையே எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தது.
இப்போது மீண்டும் மலரத் தொடங்கியுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக இருவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment