சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ட்ராபிக் படம் நடிகர் கமல்ஹாசனை மிகவும் கவர்ந்துவிட்டதாம், ஆகையால் அதன் தமிழ் ரீ-மேக்கில் கமல் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டைரக்டர் ராஜேஸ் பிள்ளை இயக்கத்தில், சீனிவாசன், ரகுமான், ரம்யா நம்பீசன், ஆசிப் அலி, அனுப் மேனன், சந்தியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ட்ராபிக். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு அல்லாமல் பலரின் பாராட்டையும் பெற்றது.
இதனிடையே இப்படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்து போய்விட்டதாம். ஆகையால் இப்படத்தை தமிழில் ரீ-மேக் செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே ராஜேஸ் பிள்ளை இப்படத்தை தமிழிலும் இயக்க தீவிர முயற்சி காட்டி வருகிறார்.
இந்தநேரம் பார்த்து கமலே நடிக்க ஆர்வம் தெரிவித்ததால் அவரிடம் நடிக்க சம்மதமா என்று கேட்டுள்ளார் ராஜேஸ். கமலும் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.
மேலும் விசா பிரச்சனையால் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் விஸ்வரூபம் படம் தள்ளிபோகும் எனத் தெரிகிறது. அதற்குள் ட்ராபிக் படத்தை முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார் கமல்.
விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment