சிம்பு நடிப்பில் இன்னும் சிலதினங்களில் வெளியாக இருக்கும் படம் "வானம்". மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்திற்கு யு/ஏ சான்று வழங்கியுள்ளனர் தணிக்கை குழுவினர்.
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற "வேதம்" படம், தமிழில் "வானம்" என்ற பெயரில் உருவாகி உள்ளது. இப்படத்தில் சிம்பு, பரத், அனுஷ்கா, வேகா, பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால், சரண்யா, சந்தானம் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
கிரிஸ் இப்படத்தை இயக்கி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். வி.டி.வி. புரோடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் பாக்ஸ் சார்பில் வி.டி.வி.கணேஷ், ஆர்.கணேஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் ஏப்ரல் 29ம் தேதி ரிலீசாக இருக்கிறது.
இதனிடையே இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இரண்டு காட்சிகளை மட்டும் நீக்கி விட்டு அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் யு/ஏ சான்று அளித்துள்ளனர்.
அத்துடன், இதுவரை சிம்பு நடித்த படங்களை காட்டிலும் இந்தபடத்தில் வித்யாசமாகவும், அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும் தணிக்கை குழுவினர் பாராட்டி இருக்கின்றனர்.
வானம் படத்தை உலகம் முழுவதும் க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி வெளியிட இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் சென்னையில் மட்டும் குறள் டி.வி.கிரியேஷன்ஸ் சார்பில் சிம்புவின் அப்பா விஜய.டி.ராஜேந்தர் வெளியிட இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். சென்னை உரிமையை மட்டும் டி.ஆர்., வாங்கியதற்கான காரணம் தெரியவில்லை.
0 comments:
Post a Comment