அஜீத்தின் மங்காத்தா படம் போன்றே, விஜய்யின் வேலாயுதம் படமும் அவரது பிறந்தநாளில் ரிலீசாகாது எனத் தெரிகிறது.
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய் நடிக்கும் 52வது படம் "வேலாயுதம்". இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
விஜய் ஆண்டனி இசையமைத்து வருகிறார். இப்படத்தை விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்தது.
படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கிவிட்டார் ராஜா. கிட்டத்தட்ட 80சதவீதத்திற்கு மேல் சூட்டிங்கை முடித்துவிட்ட ராஜா இன்னும் இரண்டு பாடல் மற்றும் சிலகாட்சிகளை மட்டும் படமாக்க இருக்கிறார். படத்தில் மொத்த 5பாடல்களாம்.
ஏற்கனவே மூன்று பாடல்களை முடித்துவிட்டார் ராஜா. அதில் ஒரு பாடலை மட்டும் சுமார் ரூ.2கோடி செலவில் பிரமாண்டமாக எடுத்து இருக்கிறார். இன்னும் 2பாடல்களை ஐரோப்பாவில் எடுக்க திட்டமிட்டு இருக்கின்றனர்.
மேலும் படத்தின் சில காட்சிகள் இன்னும் படமாக்க இருப்பதால், படத்தின் சூட்டிங் மே அல்லது ஜூனில் தான் முடியும் எனத் தெரிகிறது. இதனால் திட்டமிட்டபடி விஜய் பிறந்தநாளில் வேலாயுதம் படம் ரிலீசாகாது என்றும், ஆகஸ்ட்டில் ரிலீசாகும் என்றும் கூறுகின்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
முன்னதாக அஜீத்தின் 50வது படமான மங்காத்தா படம் அவரது பிறந்தநாளான மே1ல் ரிலீசாகும் என்று கூறினார். ஆனால் படத்தின் சூட்டிங் முடியாததால் இப்படம் தள்ளிபோனது. அதேபோல் இப்போது விஜய்யின் வேலாயுதம் படமும் சூட்டிங் முடியாததால் தள்ளிபோகிறது.
0 comments:
Post a Comment