தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வரும் தனுஷ், சிறிதும் ஓய்வின்றி அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து புக்காகி கொண்டே இருக்கிறார். தற்போது வேங்கை படத்தை முடித்துள்ளார்.
இப்படத்தை டைரக்டர் ஹரி இயக்கியுள்ளார். தமன்னா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஹரியின் முந்தைய படங்களை போன்று இந்தபடமும் ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாகியுள்ளது.
இதற்கு அடுத்து தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் 50 சதவீத சூட்டிங் முடிவடைந்து உள்ளது.
இந்நிலையில் இரண்டாம் உலகம் படத்திற்கு அடுத்து, டைரக்டர் சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக தனுஷூடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
சிம்புதேவன் ஏற்கனவே இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறைஎண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment