சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படம், ஆந்திராவில் சக்கபோடு போட்டுக் கொண்டிருப்பதால், தன்னுடைய படத்திலும் நயன்தாராவை நடிக்க வைக்க வேண்டும் என்று கூறி வருகிறார் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர்.
ஒருபக்கம் திருமணத்திற்கு நாள் பார்த்து கொண்டிருக்கின்றனர் நயன்தாராவும்-பிரபுதேவாவும். மற்றொருபுறம் என்னடான்னா...? நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.
திருமணத்திற்கு பின்னர் நடிக்க மாட்டேன் என்ற முடிவில் இருக்கிறார் நயன்தாரா. இந்தநேரம் பார்த்து அவரது மனசை கலைக்கும் வகையில், மீண்டும் நடிப்பதற்கு நிறைய ஆஃபர்கள் வந்து கொண்டு இருக்கிறதாம்.
கடைசியாக இவர் நடித்து வெளியான ஸ்ரீராம ராஜ்யம் படம் ஆந்திராவில் சக்கபோடு போட்டு கொண்டு இருக்கிறது. நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக, சீதை வேடத்தில் நடித்திருந்தார் நயன்தாரா.
இந்தபடம் ஹிட்டாக நயன்தாராவின் நடிப்பும் ஒரு முக்கிய காரணமாம். படத்தில் சீதையாகவே வாழ்ந்திருந்தார் நயன்தாரா. நயன்தாராவின் நடிப்பை பார்த்து, தன்னுடைய படத்திலும் அவரைத்தான் நடிக்க வேண்டும் என்று கூறி வருகிறார் பிரபல நடிகர் நாகர்ஜூனா.
இவருக்கும் பல சரித்திர படங்கள் சில்வர் ஜூப்ளி கொண்டாடி இருக்கிறது. இப்போது பாலகிருஷ்ணாவின் படம் ஹிட் என்றதும், தானும் அதுபோலவே ஒரு படத்தில் நடிக்க வேண்டும். அதுவும் தனக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க வேண்டும் என்று நினைக்கிறாராம்.
ராம்கோபால் வர்மா, அடுத்து ராவணனின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இதில்தான் சீதையாக நடிக்க வைக்க நயன்தாராவை தேடிக் கொண்டிருக்கிறார் நாகார்ஜூனா.
சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த நயன்தாரா, நடிப்பேன் என்றும், நடிக்கமாட்டேன் என்றும் உறுதியாக சொல்லவில்லை.
இதனால் மீண்டும் அவர் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அதன்படிதான் நயன்தாராவுக்கு இப்போது தூண்டில் போட்டிருக்கிறாராம் நாகர்ஜூனா.
1 comments:
வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் சினிமா தகவல்கள் அருமை. தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல பகிர்வுக்கு எனது வாழ்த்துக்கள். நான் மனிதர்களைப் பற்றி வேறு விதமாக என் தளத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"
Post a Comment