ஒருதலைக்காதலில் டி.ராஜேந்தருக்கு 2 ஜோடி

நடிகரும், லட்சிய தி.மு.க. தலைவருமான டி.ராஜேந்தர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக 2 நாயகிகள் நடிக்கிறார்கள். ஒரு காலத்தில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் சக்கை போடு போட்ட ஒரு தலை ராகம் படத்தை டி.ராஜேந்தர் ஒரு தலைக்காதல் என்ற பெயரில் எடுக்கவுள்ளார்.

இந்த படம் குறித்து டி.ராஜேந்தர் அளித்துள்ள பேட்டியில், அடுத்த மாதம் இறுதியில் ஒரு தலைக்காதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் நான் ஹீரோவாக நடிக்கிறேன். மும்பையை சேர்ந்த 2 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் குத்துப்பாட்டு மட்டும் அல்லாமல் தெம்மாங்கு பாட்டும் இடம்பெறும். ஒருதலை ராகம் படம் போல இந்த ஒருதலைக்காதல் படமும் மாபெரும் வெற்றி பெறும்.

இதன் படப்பிடிப்பு கொல்லிமலை, திண்டுக்கல், தேனி போன்ற பல்வேறு இடங்களில் நடைபெறும், என்றார்.

இந்த படத்தை முடித்த கையோடு டி.ராஜேந்தர் இயக்கும் புதிய படத்தில் அவரது இரண்டாவது மகனும், நடிகர் சிம்புவின் சகோதரருமான குறளரசன் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இந்த தகவ‌லையும் நிருபர்களிடம் தெரிவித்த ராஜேந்தர், சிம்பு யாரை காதலித்தாலும் அதை ஏற்று அவருக்கு திருமணம் செய்து வைப்பேன், காதலிப்பது தவறே இல்லை, என்றும் கூறியுள்ளார்

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...