ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டாவது முறையாக கோல்டன் குளோப் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மயிரிழையில் அந்த வாய்ப்பை தவறவிட்டார்.
டைரக்டர் டேனி போயல் இயக்கத்தில் உருவாகியுள்ள 127 ஹவர்ஸ் என்ற படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளிவந்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக கடந்த 2009ம் ஆண்டு இரண்டு ஆஸ்கர் விருது மற்றும், கோல்டன் குளோப் விருதுகள் கிடைத்தன.
அதேபோல் இந்தாண்டும் 127 ஹவர்ஸ் படமும் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ரஹ்மானுக்கு இந்த விருது கிடைக்கவில்லை. அதற்குபதிலாக சோஷியல் நெட்வொர்க் என்ற படத்திற்கு கிடைத்தது.
இரண்டாவது முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் கோல்டன் குளோப் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு கிடைக்காதது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
இருப்பினும் 127 ஹவர்ஸ் படத்தில் இடம்பெற்ற இப் ஐ ரைஸ் என்ற பாடலுக்கு அமெரிக்காவின் கிரிடிக் சாய்ஸ் எனப்படும் விமர்சகர்கள் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி தான்.
0 comments:
Post a Comment