மன்மதன் அம்பு படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை ; அது சுமாரான படம்தான் என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார்.
டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா உள்ளிட்டோர் நடித்த படம் மன்மதன் அம்பு. ரெட்ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருந்தார்.
இந்த படம் ரீலிசுக்கு முன்பே கமல்ஹாசனின் கவிதைப் பாடல் மூலம் சர்ச்சையை சந்தித்தது. பின்னர் அந்த கவிதைப் பாடல் நீக்கப்பட்டது.
பலகோடி செலவில் வெளிநாட்டு கப்பலில் படமாக்கப்பட்ட மன்மதன் அம்பு எதிர்பார்த்த அளவுக்கு வசூலை கொடுக்கவில்லை என்று அப்படத்தின் நாயகர்களில் ஒருவரான நடிகர் மாதவன் இப்போது தெரிவித்துள்ளார்.
அவர் தனது பேட்டியொன்றில், சில நேரங்களில் எல்லாம் சரியாக செய்தாலும் ஏதோ ஒரு தவறால் தோல்வி ஏற்பட்டு விடும். மன்மதன் அம்பிலும் அதுதான் நடந்தது.
பாக்ஸ் ஆபீஸில் இந்தப் படம் சாதிக்காது என்பது தெரியும். இது ஒரு சுமாரான படம். ஓரளவு வசூல் இருந்தது என்பதே உண்மை.
இந்தப் படத்தில் எனது வேடம் மிகவும் நல்ல விமர்சனங்களை பெற்றது. அது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்தான், என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment