மன்மதன் அம்பு படத்தில் அதிகப்படியான காட்சிகளில் வராதது குறித்து நடிகை ஓவியா கருத்து தெரிவித்துள்ளார். கமல்ஹாசனுடன் ஒரு படத்திலதவது நடிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் ஓவியா மட்டும் விதிவிலக்கா என்ன?
முதல் படமான களவாணி சூப்பர் ஹிட் ஆன மகிழ்ச்சியில் இருந்த ஓவியாவுக்கு கமல்ஹாசனின் மன்மதன் அம்பு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கமல்ஹாசன் படம் என்றதும் மறு பேச்சின்றி நடிக்க ஒப்புக் கொண்ட ஓவியாவுக்கு படம் ரீலிஸ் ஆனதும் வருத்தம் இருந்ததோ இல்லையோ...
அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. படத்தில் சொகுசு காருக்கு கொடுத்த முக்கியத்துவம் கூட ஓவியாவுக்கு தரப்படவில்லை.
இதுபற்றி ஓவியாவிடம் கேட்டால், கமல் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். அதுதான் இதற்கு காரணம். அதிகப்படியான காட்சிகளில் வராதது குறித்து வருத்தம்தான். ஆனால் அது கவுரவ வேடம்தானே. அதனால் வருத்தமில்லை.
இருந்தும் மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் நான் இருப்பதுபோன்ற காட்சி இல்லை. அதில் பெரிய வருத்தம் இருக்கிறது. மாதவன் கூட மட்டும்தான் இருப்பேன்.
என்னுடைய நிறைய நண்பர்களுக்கு மன்மதன் அம்பு படத்தில் நான் நடித்ததே தெரியாது. தியேட்டரில் பார்த்ததில் சிலருக்கு அதிர்ச்சி, என்று கூறுகிறார். நியாயமான வருத்தம்தான்!
0 comments:
Post a Comment