பொதுவாக சினிமாவில் நடிக்க வரும் நடிகர், நடிகைகளில் சில பேர் தான் நிலைத்து நிற்கிறார்கள். சிலர் ஒன்றிரண்டு படங்களிலேயே காணாமல் போய்விடுகின்றனர். அதேநிலைமை தான் நடிகை ஸ்வாதியின் நிலை.
"சுப்ரமணியபுரம்" படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஸ்வாதி. மலையாளத்தை சேர்ந்த ஸ்வாதி அங்கு ஒரு டி.வி. ஷோவில் ஏதோ நிகழ்ச்சி நடத்தி வந்தார். அதை பார்த்த டைரக்டர் சசிக்குமார் "சுப்ரமணியபுரம்" படத்தில் நடிக்க வைத்தார்.
முதல்படத்திலேயே தன்னுடைய அழகிய கண்களால் ரசிகர்களை ஈர்த்தவர் ஸ்வாதி. சுப்ரமணியபுரம் படத்திற்கு பிறகு நிறைய படவாய்ப்புகள் வந்தன.
ஆனால் அம்மணியோ நல்ல கதை, முன்னணி நடிகர்ளுடன் நடிப்பது, நிறைய சம்பளம் என்று ஏகப்பட்ட கண்டிஷன் போட்டார்.
அதன் விளைவு அம்மணிக்கு ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் மலையாளத்தில் டி.வி. நிகழ்ச்சியே பண்ண தொடங்கிவிட்டாராம்.
பாவம் ஸ்வாதி! உண்மையில் அவரது நிலைமை பரிதாபம் தான்!
0 comments:
Post a Comment