"வெண்ணிலா கபடிக்குழு", "நான் மகான் அல்ல" போன்ற படங்களை இயக்கியவர் டைரக்டர் சுசீந்திரன். இதற்கு அடுத்தபடியாக "அழகர்சாமியின் குதிரை" என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தை திரையிடுவதற்கான இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.
இதனைத்தொடர்ந்து விக்ரம் வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் சுசீந்திரன். இன்னும் பெயர் இடப்படாத இப்படத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். படத்திற்கு நாயகியை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.
அமலா பாலை தன்னுடன் நடிக்க வைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தார் விக்ரம். காரணம் "மைனா" படத்தில் அமலா பாலின் நடிப்பை பார்த்து தன்னுடைய "தெய்வமகன்" படத்தில் அவரை சிபாரிசு செய்துள்ளார்.
அதேபோல் இந்தபடத்திலும் அவரை நடிக்க வைக்க எண்ணியிருந்தார். ஆனால் டைரக்டர் சுசீந்திரனோ, அமலா பால் வேண்டாம், தீக்ஷா செத் தான் சரியானவர் என்று அவரையே ஓ.கே.பண்ணிவிட்டார். படத்தில் இன்னொரு நாயகியாக அஞ்சலி நடிக்கிறார்.
தீக்ஷா செத் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தெலுங்கில் "வேதம்" படத்தில் அல்லு அர்ஜூனாவுடனும், ரவி தேஜாவுடன் "மிராபிகே" படத்திலும், கோபி சந்த் உடன் "வான்டட்" படத்திலும் நடித்துள்ளார்.
0 comments:
Post a Comment