நடிகை அனுஷ்கா இனிமேல் தன்னிடம் கால்ஷீட் கேட்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களிடம் இரட்டை விரலை காட்ட முடிவு செய்திருக்கிறாராம்.
ரெண்டு படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான அனுஷ்கா அப்பொதெல்லாம் ரசிகர்கள் மனதில் ஒட்டவில்லை. அருந்ததீ படம் மூலம் ரீ-எண்ட்ரீ கொடுத்த பிறகு தமிழ் ரசிகர்களின் மனதில் பட்டாபோட்டு குடியேறத் தொடங்கி விட்டது இந்த ஆறடி உயர அல்வா துண்டு.
இன்றைய தேதியில் ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகையும் இவர்தான். இரவு பகலாக சூட்டிங்கில் பங்கேற்று பிஸியாக இருக்கும் அம்மணியைத் தேடி தினம் தினம் புதுப்புது படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
சில தயாரிப்பாளர்கள் தினமும் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற தொந்தரவு தயாரிப்பாளர்களை விரட்டியடிக்க வழக்கமாக முன்னணி நடிகைகள் செய்யும் சம்பள உயர்வு வித்தையையும் செய்திருக்கிறார் அனுஷ்.
அதற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறதாம். ஆம்! அம்மணி சம்பளமாக 2 கோடி வேண்டும் என்று கேட்க சில தயாரிப்பாளர்கள் அம்மாடியோவ்... என்று அலறியடித்து ஓட்டம் பிடித்து விட்டார்கள்.
இதனால் இனிமேல் தன்னை அணுகுபவர்களிடம் இரட்டை விரலையே காட்ட திட்டமிட்டிருக்கிறாம் அனுஷ்.
கமல்ஹாசனுடன் ஜோடி சேரப்போகும் புதிய படத்தில் அனுஷ்காவுக்கு 2 சி சம்பளமாம். எத்தனை சி, சொன்னாலும் தர ரெடி என்று சொல்லிக் கொண்டும் கோடம்பாக்கத்தில் சில தயாரிப்புகள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன என்பது அம்மணிக்கு தெரியாதா என்ன?
0 comments:
Post a Comment