2 ஆஸ்கார் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த முறை ஆஸ்கார் விருதினை நழுவ விட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று 83வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடந்தது.
கண்களை கவரும் வகையில் வண்ணமயமாக நடந்த இந்த விழாவில் ஒரிஜினல் இசை மற்றும் ஒரிஜினல் பாடல் பிரிவுகளில் 127 ஹவர்ஸ் படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரைப்பட்டிருந்தது.
ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை. இந்த ஆண்டு பின்னணி இசைக்கான விருதை டிரன்ட் ரெஸ்னர் மற்றும் அடிகஸ் ரோஸ் ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
விழாவில் அதிக அளவிலான விருதுகளை தி கிங்ஸ் ஸ்பீச், இன்செப்ஷன், தி சோஷியல் நெட்வொர்க் ஆகிய படங்கள் பெற்றன.
இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது காலின் பிர்த் என்பவருக்கு தி கிங்ஸ் ஸ்பீச் என்ற படத்திற்காகவும், சிறந்த நடிகை விருது நதாலி போர்ட்மேனுக்கு பிளாக் ஸ்வான் படத்திற்காகவும் கிடைத்தது. தி கிங்ஸ் ஸ்பீச் படம் சிறந்த இசையமைப்பளருக்கான விருதையும் பெற்றது.
இதுதவிர சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்), சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த இயக்குனர் என மொத்தம் 5 விருதுகளை தி கிங்ஸ் ஸ்பீச் படம் தட்டிச் சென்றது.
தி சோஷியல் நெட்வொர்க் படம் இசை (ஒரிஜினல் ஸ்கோர்), சிறந்த எடிட்டிங், சிறந்த திரைக்கதை (தழுவல்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் விருதுகளை வென்றது.
இன்செப்ஷன் படம் விசுவல் எபெக்ட், ஒலிக்கலவை, ஒளிப்பதிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றது. சிறந்த வெளிநாட்டுப் படங்கள் வரிசையில் டென்மார்க் படமான இன் எ பெட்டர் வேர்ல்ட் படம் ஆஸ்கார் விருது பெற்றது.
0 comments:
Post a Comment