அஜீத்தின் பில்லா-2வில் டைரக்டர் விஷ்ணுவர்தன் விலகியதையடுத்து, டைரக்டர் பொறுப்பை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி எடுத்துள்ளார். அதேபோல் பில்லா படத்தில் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா பில்லா-2விலும் இசையமைக்கிறார்.
கடந்த 2007ம் ஆண்டு அஜீத்-நயன்தாரா-நமீதா நடிப்பில் டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், யுவனின் இசையில் மாபெரும் வெற்றி பெற்ற படம் பில்லா.
இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பில்லா-2 எனும் பெயரில் எடுக்க இருக்கின்றனர்.
டேவிட் எப்படி பில்லாவாக மாறினானர் என்பதே படத்தின் கதை.பில்லாவை இயக்கிய விஷ்ணுவர்தனே பில்லா-2வை இயக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென விஷ்ணுவர்தன் இப்படத்திலிருந்து விலகினார்.
இதனையடுத்து யார் இந்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், கமல் நடித்து சூப்பர் ஹிட்டான உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி பில்லா-2 படத்தை இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.என்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சுரேஷ் பாலாஜி-ஜார்ஜ் பயஸின் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஆகிய இருவரும் இணைந்து பில்லா-2வை தயாரிக்கின்றனர்.
தீனா, பில்லா, ஏகன், மங்கத்தா படத்தை தொடர்ந்து பில்லா-2விற்கும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்கிறார்.
படத்திற்கான நாயகி மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. மே மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.
0 comments:
Post a Comment