மலையாளத்தில் உருமி, தமிழில் 15ம் நூற்றாண்டு உறைவாள், ஆங்கிலத்தில் வாஸ்கோடாகாமா எனும் பெயர்களில் புதிய படமொன்று உருவாகி வருகிறது.
டைரக்டர் சந்தோஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த வாஸ்கோடாகாமாவின் வரலாற்று நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் கதை இருக்குமாம்.
ப்ருத்வி ராஜ், பிரபுதேவா, ஆர்யா, ஜெனிலியா, வித்யாபாலன், தபு, நித்யா மேனன் உள்ளிட்ட தமிழ், மலையாளம், இந்தி நட்சத்திரங்களுடன் இங்கிலாந்து நடிகர்ள் அலெக்ஸ், ராபின் உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர்.
இதில் வித்யாபாலன் ஒத்தைப் பாட்டு ஆடுவது போன்று, இளவரசியாக நடிக்கும் ஜெனிலியா போடும் தாசியாட்டமும் பேசப்படுமாம்.
சந்தோஷ் சிவனுடன் இணைந்து நடிகர் ப்ருத்விராஜூம் தயாரிக்கும் 15ம் நூற்றாண்டு உறைவாள், மலையாளத்தில் எடுக்கப்பட்டதிலேயே மிகவும் பெரிய பட்ஜெட்டாம்.
ஆமாம், பின்னே... தமிழ், ஆங்கிலத்திலும் ஒருசேர உருவாகிறதே
1 comments:
thanks for sharing. vaalththukkal
Post a Comment