தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கிறார் வடிவேலு. அத்துடன் மத்திய அமைச்சர் அழகிரி சச்சின் டெண்டுல்கர் என்றும், துணை முதல்வர் ஸ்டாலின் சேவக் என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. தேர்தல் பிரச்சாரத்திற்காக நடிகர், நடிகையரும் களத்தில் குதிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இதனிடையே நடிகர் விஜயகாந்துடன் ஏற்பட்ட மோதலால், அவரை எதிர்த்து வடிவேலு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, தமிழகத்தில் மீண்டும் அய்யா கருணாநிதி அவர்கள் முதல்வராகனும், கடந்த தேர்தலின் போது இவர் அளித்த வாக்குறுதியை அனைவரும் கதாநாயகன் என்று வர்ணித்துள்ளனர். சொன்னது போல் அவருடைய வாக்குறுதிகளை நிறைவேற்றினார்.
அதேபோல் இந்தாண்டும் தேர்தல் அறிக்கையில் பல நல்ல திட்டங்களை வழங்குவதாக கூறியிருக்கிறார். நிச்சயம் அவர் சொன்னதை செய்வார். அத்துடன் அவரது தலைமையில் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் மாதிரி அண்ணன் அழகிரியும், சேவக் மாதிரி துணை முதல்வர் ஸ்டாலினும் இருக்கின்றனர்.
இவர்களும் இருவரும் சேர்ந்து சிக்ஸர்களாக விளாச போகின்றனர். மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்க போகிறது. இவர்களுடன் நானும் சேர்ந்து தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய போகிறேன்.
வருகிற 23ம் தேதி திருவாரூரில் முதல்வர் கருணாநிதி அவர்கள் பங்கேற்கும் பிரச்சாரத்தில் நானும் பங்கேற்க இருக்கிறேன்.
அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யவுள்ளேன் என்றார்.
2 comments:
சிரிப்புத் தொழில் என்னாச்சு.... ? இதெல்லாம் தேவைத்தானா...?
பாவம் அவங்க கூட சச்சின் சேவக் ரெண்டு பேரையும் ஒப்பிட்ட நேரம் பைனல் மேச்சில ரெண்டு பேரும் சொதப்பிட்டாங்க. வடிவேலு வேணாப்பா, சச்சின் சேவக் பாவம் அவங்கள உட்டுப்பா
Post a Comment