வெள்ளித்திரையில் தனித்தனியே சிலபல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் பார்த்திபனும், டைரக்டர் கவுதம் மேனனும் சின்னத்திரைக்காக கைகோர்க்கிறார்கள். இவர்கள் இருவரும் இணையப் போகும் தொடர் ஒரு விறுவிறுப்பான துப்பறியும் தொடராம்.
இதுபற்றி கவுதம் மேனன் அளித்துள்ள பேட்டியில், வெள்ளித்திரை அனுபவத்தை சின்னத்திரையில் பெற முடியாது என்ற தவறான கருத்தை தகர்த்தெரியும் வகையில் என்னுடைய திகில் தொடர் இருக்கும்.
பெரிய திரை அனுபவத்தை தரும் அளவுக்கு பரபரப்பும், புதுமையும் நிறைந்த கச்சிதமான தொடராக அதனை இயக்கவுள்ளேன். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும், என்றார்.
நடிகர் பார்த்திபன் கூறுகையில், தொலைக்காட்சித் தொடரில் நடிப்பது உண்மைதான். இதுதொடர்பாக ரொம்ப நாளாகவே நானும், கவுதமும் விவாதிச்சிட்டு இருந்தோம். இந்த முயற்சி மிக வித்தியானமாதாகவும், இதுவரை யாரும் செய்யாத முயற்சியாகவும் இருக்கும்.
ஹாலிவுட் தரத்தில் சின்னத்திரை தொடரை எடுக்கலாம் என்பதை எங்களது சீரியல் நிரூபிக்கும். சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்த இயக்குனர்கள் சங்க விழாவின்போதுதான் இதுகுறித்த திட்டம் உருவானது. இந்தத் தொடரை தயாரிப்பவரும் டைரக்டர் கவுதம்மேனன்தான், என்றார்.
ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த புதிய த்ரில் தொடருக்கு இசையமைக்கவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
0 comments:
Post a Comment