டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் அஜித் - நடிகை த்ரிஷா ஜோடி நடித்து வரும் புதிய படமான மங்காத்தா ரீலிஸ் தேதி தள்ளிப்போகிறது.
அஜித் பிறந்த நாளான மே 1ம்தேதி படத்தை ரீலிஸ் செய்யும் திட்டத்துடன் விறுவிறுப்பாக சூட்டிங்கை நடத்தி வரும் குழுவினர், இப்போது ரீலிஸை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர்.
அஜித் - த்ரிஷா தவிர லட்சுமிராய், பிரேம்ஜி அமரன், அர்ஜூன், வைபவ் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட சூட்டிங் இப்போது மும்பையில் நடந்து வருகிறது.
ஏப்ரல் 16ம்தேதி வரை மும்பையில் நடக்கவுள்ள படப்பிடிப்பை முடித்த கையோடு 2 பாடல் காட்சிகளை எடுக்க வெளிநாட்டுக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார் வெங்கட்பிரபு.
அதன் பிறகுதான் படத்துக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்ய முடியும். எனவே, தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு ஒருபுறம், ஐபிஎல் கிரிக்கெட் ஒருபுறம் என பரபரப்புக்கு இடையே படத்தை அவசரம் அவசரமாக ரீலிஸ் செய்ய வேண்டாம் என நினைக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.
இதனால் மே மாதம் என இருந்த ரீலிஸ் தேதி ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 comments:
பகிர்வுக்கு நன்றீ
Post a Comment