நடிகை லாரா தத்தா-மகேஷ் பூபதி இடையே ரகசியமாக பதிவு திருமணம் நடைபெற்றது. இதில் இருவீட்டாரது உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி, மாடல் அழகி ஸ்வேதா மேனனை திருமணம் செய்தார். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதனையடுத்து லாரா தத்தாவை காதலித்து வந்தார் மகேஷ் பூபதி.
இருவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மகேஷ் பூபதிக்கும், லாரா தத்தாவுக்கும் திடீரென பதிவு திருமணம் நடந்தது.
பந்த்ராவில் உள்ள மகேஷ் பூபதி வீட்டில் ரகசியமாக நடந்த இந்த திருமணத்தில் இருவீட்டாரது குடும்பத்தார் மட்டும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து புது ஜோடிகள் இரவு கோவா புறப்பட்டு சென்றனர். வருகிற 19ம் தேதி, தாஜ் அகுடாவில் உள்ள சன்செட் அவென்யூவில் இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து இருதினங்களில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என தெரிகிறது.
0 comments:
Post a Comment