பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை இயக்கியவர் டைரக்டர் வெற்றி மாறன். இதனையடுத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.
இப்படத்தை க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் யாரை நடிக்க வைப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார் வெற்றிமாறன். இதற்காக அவர் மூன்று நடிகர்களை தேர்வு செய்துள்ளார். கார்த்தி, ஜீவா, சிம்பு ஆகியோர் அந்த மூவர்.
இந்த மூன்று நடிகர்களும் தற்போது தமிழில் முன்னணி நடிகர்கள். கார்த்தி நடித்த பருத்திவீரன் முதல் கடைசியாக நடித்த சிறுத்தை வரை அனைத்தும் படங்களுமே ஹிட் தான்.
அதேபோல் நடிகர் சிம்புவுக்கும், ஜீவாவுக்கும் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் எல்லாம் ஹிட்டான படம்தான்.
தவிர விரைவில் வெளிவர இருக்கும் சிம்புவின் வானம் படமும், ஜீவாவின் கோ படமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆகையால் இந்த மூன்று நடிகர்களில் யாரை தேர்வு செய்யலாம் என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் வெற்றிமாறன்.
ஆனால் ஒன்று, இந்த மூவரில் ஒருவர் தான் வெற்றிமாறனின் அடுத்தபடத்தின் கதாநாயகன் என்பது மட்டும் உறுதி.
0 comments:
Post a Comment