அஜீத்தின் புதியபட டிரைலரும், தனுஷின் முதல் இந்திபடமான ராஞ்சனா பட டிரைலரும் இணையதளங்களில் பட்டைய கிளப்பி கொண்டிருக்கின்றன. லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த டிரைலரை பார்த்து ரசித்துள்ளனர்.
பில்லா-2 படத்திற்கு பிறகு அஜீத், விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி, தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
யுவன் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆனபோதும் படத்திற்கு இன்னும் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
கடந்த மே-1ம் தேதி, அஜீத் பிறந்தநாளில் இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அன்றும் தலைப்பு வெளியிடப்படவில்லை. இருந்தபோதும் அஜீத் ரசிகர்களுக்காக படத்தின் டீசர் ஒன்று வெளியிடப்பட்டது.
சுமார் 40 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. டீசர் வெளியிடப்பட்ட முதல் நாளே லட்சக்கணக்கான ரசிகர்கள் இணையதளங்களில் பார்வையிட்டுள்ளனர்.
டீசர் வெளியிடப்பட்ட நாள்முதல் இதுநாள் வரை சுமார் 20 லட்சம் பேர் அஜீத்தின் புதிய பட டீசர் பார்த்து ரசித்துள்ளனர். அதேப்போல் தனுஷின் முதல் இந்திப்படமான ராஞ்சனா படத்தின் டிரைலரும் கடந்தவாரம் வெளியானது.
அந்தப்படத்தின் டிரைலரும் ரசிர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தனுஷின் டிரைலரையும் சுமார் 20 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். தனுஷின் மற்றொரு படமான மரியான் பட டிரைலரையும் சுமார் 8லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
இதில் தனுஷ் படங்களின் டிரைலரை காட்டிலும் அஜீத் பட டிரைலருக்கு தான் அதிக மவுசு, அதனால் இன்னும் சில தினங்களின் தனுஷ் பட டிரைலரை முந்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
0 comments:
Post a Comment