பாலச்சந்தர் இயக்கத்தில், ரஜினி நடித்த, "தில்லு முல்லு படம், தற்போது, ரீ-மேக் ஆகிறது. "தில்லு முல்லுவில், கமல்ஹாசனும், நட்புக்காக, வக்கீலாக ஒரு கேரக்டரில் நடித்திருந்தார்.
ரீ-மேக் படத்தில், ரஜினி நடித்த வேடத்தில், சிவா நடிக்க, தேங்காய் சீனிவாசன் ரோலில் பிரகாஷ் ராஜும், சவுகார் ஜானகிவேடத்தில் கோவை சரளாவும் நடிக்கின்றனர்.
ஆனால், கமல் நடித்த வேடத்துக்கு தான், யாரை நடிக்க வைக்கலாம் என்று, சில மாதங்களாக பரிசீலனை செய்தவர்கள், பின் சந்தானத்தை புக் செய்து படமாக்கி விட்டனர்.
"தில்லு முல்லுவில் ரஜினிக்கு கமல் உதவுவது போல், இதில் சிவாவுக்கு உதவும் வேடத்தில், நடித்துள்ளாராம், சந்தானம். "கமல் சார் நடித்தவேடத்தில் நடித்தது ரொம்ப பெருமையாக உள்ளது என்று கூறுகிறார், சந்தானம்.
0 comments:
Post a Comment