இதுவரை எந்த இயக்குனரின் படத்திலும் தொடர்ச்சியாக நடித்ததில்லை விக்ரம். ஆனால், தெய்வத்திருமகள் படத்தில் நடித்தவர் பின்னர் கரிகாலன் படத்தில் நடிக்கத் தொடங்கினார்.
ஆனால், அப்போது பார்த்து ஒரு உதவி இயக்குனர் தனது கதையை திருடி படமாக்குவதாக புகார் தெரிவித்தார். இதனால் டென்சன் ஆகிப்போனார் விக்ரம். அப்படத்திலிருந்தே விலகினார்.
இந்த சூழ்நிலையில், தன்னிடம் தாண்டவம் என்றொரு கதை ரெடியாக இருப்பதாக இயக்குனர் விஜய் சொன்னதால், உடனே அதில் கமிட்டாகி அவுட்டோர் சென்று விட்டார் விக்ரம்.
ஆனால் அந்த படம் தோல்வியடைந்து விட்டது. அதன்பிறகு ஷங்கரின் ஐ படத்தில் நடிக்க கமிட்டான விக்ரம், அப்படத்தில் நடிக்கும்போதே நாம் இருவரும் இன்னொரு படத்திலும் இணையலாம் என்று விஜய்யிடம் கூறியிருந்தாராம்.
அதனால் தற்போது தலைவா படத்தை இயக்கியுள்ள விஜய், மீண்டும் விக்ரமை அணுகினாராம். ஆனால், விக்ரமோ, ஐ படம் முடிய இன்னும் அதிக டயம் ஆகும்.
அதனால் இப்போது நாம் இணைய சாத்தியமில்லை. எனக்காக ரெடி பண்ணிய கதையை வேறு யாராவது நடிகரை வைத்து படமாக்கி விடுங்கள் என்று எஸ்கேப்பாகி விட்டாராம்.
இதனால், இப்போது தனது மதராசப்பட்டினம் படத்தில் நடித்த ஆர்யாவைக் கொண்டு புதிய பட வேலைகளில் இறங்க தயாராகி வருகிறார் டைரக்டர் விஜய்.
0 comments:
Post a Comment