தலைவா படத்தின் பாடலை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் அப்படத்தின் டைரக்டர் விஜய்.
"துப்பாக்கி" படத்திற்கு நடிகர் விஜய் "மதராசப்பட்டினம்" டைரக்டர் விஜய் இயக்கத்தில் "தலைவா" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் ஜோடியாக அமலாபாலும், மற்றொரு ஹீரோயினாக இந்தி நடிகை ராகினியும் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. படத்தின் ஆடியோ ரிலீஸை அடுத்த மாதம் வெளியிட உள்ளனர்.
இந்நிலையில் "தலைவா" படத்தில் இடம்பெற்று இருக்கும் பாடல் ஒன்று இணையதளங்களில் உலா வந்து கொண்டிருப்பது "தலைவா" படக்குழுவினரை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
இதுகுறித்து படத்தின் டைரக்டர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோர் சென்னை கமிஷனரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
கமிஷனரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம பேசிய டைரக்டர் விஜய், "தலைவா" படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள "வாங்கண்ணா வாங்கண்ணா..." என்ற பாடலை பாடல் வெளியீட்டுக்கு முன்பாகவே யாரோ திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
அது யார் என்பது தெரியவில்லை. எங்கள் உழைப்பு சுரண்டப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி கமிஷனரிடம் புகார் செய்துள்ளோம்.
இப்படம் சுமார் ரூ.60 கோடி செலவில் உருவாகியுள்ளது. விரைவில் பாடல்கள் வெளியாக இருக்கின்றன என்றார். அப்போது டைரக்டர் விஜய்யுடன், தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயினும் உடன் இருந்தார்.
0 comments:
Post a Comment