தனுஷின் அம்பிகாபதி படத்துடன் போட்டி போட பாரதிராஜாவின் அன்னக்கொடி படம் தயாராகி வருகிறது. அம்பிகாபதி படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
இந்த படம் வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல புதுமுகம் லக்ஷ்மண் நாராயண், கார்த்திகா நடித்துள்ள பாரதிராஜாவின் அன்னக்கொடிக்கும் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
இந்த படமும் வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அம்பிகாபதியின் இந்திப்பதிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தமிழ் பதிப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இதேபோல பாரதிராஜாவின் அன்னக்கொடியும் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கிறது. இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி போட்டியிடவுள்ளது.
0 comments:
Post a Comment