நயன்தாரா ரிட்டன்ஸ் - எடுத்த எடுப்பிலேயே ரூ.1.5 கோடி சம்பளம்
நண்பன் படத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்
நடிகர் விஜய் நடித்த "நண்பன் படத்தில் ஆண்டி, பண்டாரம் என ஜாதியின் பெயரை குறித்து வசனங்கள் வருவதால், அவற்றை நீக்கக் கோரி விரைவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தமிழ்நாடு மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் சந்திரசேகர், இயக்குனர் ஷங்கர் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு அக்கூட்டமைப்பின் தலைவர் சேம நாராயணன் அனுப்பியுள்ள கடிதம்:
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்த ஆண்டி, பண்டார சமூகத்தினர்கள் தமிழகத்தில் பரவலாக உள்ளனர். அவர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
நண்பன் திரைப்படத்தில் சில காட்சிகளில் ஆண்டி, பண்டாரம் என ஜாதியின் பெயரை குறித்து வரும் வசனங்கள் அச்சமுதாய மக்கள் மனம் புண்படும் அளவிற்கு அமைந்துள்ளது.
ஆண்டி என்றும், பண்டாரம் என்றும் வரும் அந்த வார்த்தைகளையும், பாரி, பூரி, கக்கூஸ் நாரி என்ற வார்த்தைகளையும் அப்படத்தில் இருந்து நீக்க வேண்டும்.
அந்த வசனத்தை நீக்கவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
ஊழலை கையில் எடுக்கிறார் கமல்ஹாசன்
பில்லா-2 திரைப்படம் ஒரு முன்னோட்டம்
குள்ள நடிகரின் ராயல்டி ரவுசு
விஜய்யை அடிக்க தயங்கிய ஸ்ரீகாந்த்
மும்பை சர்வதேச படவிழாவில் 2 தமிழ்ப்படங்கள்
கமல் வேடத்தில் நடிக்க சல்மான்-ஷாரூக் போட்டி
பில்லா 2 - ரூ.5.30 கோடிக்கு வெளிநாட்டு உரிமை
துப்பாக்கியில் இருக்கும் புல்லட் விஜய்
அஜித்தின் பில்லா-2 போஸ்டர்கள் வெளியீடு
மெரினா திரைப்படம் ஒரு முன்னோட்டம்
கமல் படத்தில் அஜித்
இந்தி ரமணாவில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய்!
நண்பன் படத்திற்கு எதிர்ப்பு - தியேட்டர்கள் அடித்து நொறுக்கம்
நண்பன் - சினிமா விமர்சனம்
த்ரி இடியட்ஸ் எனும் பெயரில் இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற இந்தி திரைப்படம் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிக்க நண்பன் ஆகியிருக்கிறது!
பெற்றவர்களின் ஆசையை பிள்ளைகள் மீது திணிக்காமல் படிப்பு விஷயத்தில் பிள்ளைகளின் விருப்பப்படி விட்டால், அவர்கள் விரும்பிய துறையில் அவரவர் முன்னுக்கு வரமுடியும் எனும் கருத்தை கதையாக்கி, அதை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும் கமர்ஷியலாகவும் சொல்ல முடியுமோ அத்தனைக்கு அத்தனை அமர்க்களமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
விஜய், பஞ்சவன்பாரி வேந்தனாக பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார். இவராகத்தான் இருக்கமுடியும் "கொசக்சி பச புகழாகவும் என்பதை ஸ்ரீவத்சன் எனும் சைலன்சர் சத்யன் அடிக்கடி சொல்வதிலிருந்து ஆரம்பத்திலேயே யூகிக்க முடிவது விஜய்யின் பாத்திரத்தை என்னவோ விஜய் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே நடித்து அதை சரிசெய்திருக்கிறார்.
பஞ்சவன் பாரிவேந்தன் கொசக்சி பசபுகழ் என எண்ணற்ற முகங்கள் விஜய்க்கு இப்படத்தில் இருந்தாலும் இலியானாவுடன் காதல் வயப்பட்டு டூயட் பாடும் விஜய்யின் இயல்பான முகமே இளமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது. விஜய் பாத்திரத்தை பொறுத்தவரை ஆயிரம் நிறை, குறைகள் சொன்னாலும் ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோ அந்தப் பக்கமே எட்டிப்பார்க்காமல் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க காமெடியிலேயே கலக்கி இருப்பது வரவேற்கத்தக்கது!
சேவற்கொடி செந்தில் - ஜீவாவுக்கும், வெங்கட் ராமகிருஷ்ணன் எனும் ஸ்ரீகாந்த்துக்கும் ஆல் இஸ் வெல் என நெஞ்சில் கைவைத்துக் கொண்டு கவலைகளை மறந்திருக்க சொல்லும் விஜய்யின் சொல்-செயல்தான் வேதவாக்கு என்றாலும் ஆங்காங்கே அதிலும் நடிப்பிலும் மிளிர்ந்து நிற்கிறார் ஜீவா. பலே...பலே!
கதாநாயதி இலியானா ரியா எனும் பாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் மட்டுமே அவருக்கு பில்-டப்புகள் பிரமாதப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிலும் இருக்காண்ணா, இல்லியண்ணா இடுப்பானா இலியானா... பாடலில் இலியானா பிரமாதம்ண்ணா!
அதேமாதிரி இக்கட்டான சூழ்நிலையில் அக்கா அனுயாவிற்கு பிரசவம் பார்க்கும் இன்ஜினியர் விஜய்க்கு இளம் டாக்டரான இலியானா வெப்காமிரா வீடியோவில் பிரசவ மருத்துவ குறிப்புகள் கொடுக்கும் இடங்களில் பிரமாதமாக நடித்தும் இருக்கிறார். பேஷ், பேஷ் கீப் இட் அப்!
நம் காதோரம் இன்னமும் இழையோடும் ஹாரிஸ் ஜெயராஜின் இனிய இசையும், மனோஜ் பரமஹம்சாவின் காண்போர் கண்ணுக்குள்ளேயே எப்போதும் நிற்கும்படியான ஒளிப்பதிவும் நண்பனின் பெரும்பலம்!
ஆயிரம்மிருந்தும் வசதிகள் இருந்தும் பிரமாண்டத்திற்கு பெயர்போன ஷங்கர், இயற்கை உபாதைகள் வருவது, போவதையெல்லாம் பிரமாண்டபடுத்தியிருப்பது சைலன்ஸ் காமெடி என்றாலோ, இப்படத்தில் வரும் சைலன்ஸரி (சத்யன்)ன் காமெடி மட்டுமென்றாலோ ஓகே! ஜீவா, ஸ்ரீகாந்தை எல்லாம் பிரின்ஸிபால் வீட்டு வாசலில் ஒன்பாத்ரூம் போகவிடுவதையும், ஆ, ஊ என்றால் ஜட்டியோடு டான்ஸ் ஆட விடுவதையும் காலில் விழ செய்வதையும் எற்றுக் கொள்ளவே முடியவில்லை.
என்னதான் இளைஞர் பட்டாளம் காலேஜ் கேம்பஸ், ராகிங், ரவுசு, ரீமேக்கதை இத்யாதி, இத்யாதி என்றாலும் "உவ்வே என குமட்டல் வருவதை இயக்குநர் ஷங்கர் நினைத்திருந்தால் நிச்சயம் தவிர்த்திருக்கலாம்!
ஆக மொத்தத்தில் எல்லாவற்றையும் ரசிக்க தெரிந்தவர்களுக்கு "நண்பன் - நன்"ஃபன்
விஜய்யின் உழைப்பை பார்த்து வியந்து போன ஸ்ரீகாந்த்
பிப்ரவரி 3-ல் கொலவெறி 3 ரிலீஸ்
வெறும் 25நாளில் உருவான ஒரு படம்
இனி பண்டிகை நாட்களில் மட்டுமே பெரிய நடிகர்கள் படம் ரிலீஸ்
ஸ்லிம்மாகும் கொழு கொழு ஹன்சிகா
இனிமேல் ஹன்சிகாவை யாரும் கொழு கொழு நடிகை என்று கூறமாட்டார்கள்...! ஆம் தனது உடம்பை குறைத்து டயட்டில் இருந்து வருகிறார் ஹன்சிகா மோத்வானி. கடந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு புதுவரவாக வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
மாப்பிள்ளை, எங்கேயும் காதல், வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு அவர் நடித்த வேலாயுதம் படத்தை தவிர மற்ற இரண்டு படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் அம்மணிக்கு கோலிவுட்டில் ஏகப்பட்ட வரவேற்பு. தற்போது உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் சிம்புவுடன் வேட்டை மன்னன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
அம்சமான முகமும், அழகான சிரிப்பும் கொண்ட ஹன்சிகாவை பலரும் பப்ளி கேர்ள் என்று தான் அழைத்து வருகின்றனர். அதற்கு காரணம் அவருடைய கொழு கொழு உடம்பு தான்.
அதுமட்டுமல்ல இவருக்கு சின்ன குஷ்பூ என்று பட்டம் அளித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்திய சிலகாலத்தில் தனது உடல் பெருத்துவிட்டதால் சற்றே கவலை அடைந்த ஹன்சிகா, தனது உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்பை அதிநவீன சிகிச்சை மூலம் குறைத்துள்ளாராம்.
மேலும் உடம்பு மறுபடியும் அதிகமாகல் இருக்க அம்மணி பார்த்து, பார்த்து உணவு வகைகளை சாப்பிடுகிறாராம்.
தீவிர டயட்டில் இருக்கும் ஹன்சிகாவை இனி யாரும் பார்த்தால் கொழு கொழு ஹன்சிகா என்று கூறமாட்டார்கள். அந்தளவிற்கு தனது உடம்பை குறைத்து ஸ்லிம்மாக்கி வருகிறார் ஹன்சிகா
ரீல் மம்மியாகிறார் ரியல் மம்மி
உலக அமைதிக்காக சிம்பு பாடிய பாடல்
பிரபல பாப் பாடகர் ஏகான் மற்றும் ராப் இசைக் கலைஞர் ரிஹானா ஆகியோருடன் கூட்டு சேர்ந்து உலக அமைதிக்காக ஒரு பாடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் நடிகர் சிம்பு.
இதுவரை லூசுப்பெண்ணே... எவன்டி உன்ன பெத்தான் போன்ற பாடல்களை எழுதி இளைஞர்கள் மத்தியில் வரவேற்பும், பெண்கள் மத்தியில் அதிருப்தியையும் சம்பாதித்து கொண்ட சிம்பு, பெண்களையும் திருப்திபடுத்தும் விதமாக, சமீபத்தில் ஒஸ்தி படத்தில் பொண்டாட்டி பாடலை எழுதினார்.
இந்தபாடலை கேட்டு பலரும் தங்களுக்கு வரப்போகிற கணவர் இப்படி இருக்கமாட்டாரா...! என்று பெண்களை ஏங்க வைத்தார்.
இந்நிலையில் இப்போது எல்லாவற்றுக்கும் மேலாக ஒருபடி மேலே போய், உலக அமைதிக்காக ஒரு பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். பிரபல அமெரிக்க பாப் பாடகர் ஏகான் மற்றும் ராப் இசைக் கலைஞர் ரிஹானா ஆகியோருடன் சேர்ந்து இந்த பாடலை உருவாக்கிறார் சிம்பு.
96 மொழிகளில் காதல் என்று பொருள்படும் வார்த்தைகளை இப்பாடலில் பயன்படுத்தி இருக்கிறார் சிம்பு. 96 மொழிகளையும், பல கோடி மக்களையும் இணைக்க, தடைகளை உடைத்து, அனைவரும் உடையாத பந்தங்களாக.. இதோ.. உலக அமைதிக்காக ஒரு இந்தியனின் சிறு பங்களிப்பு " என்று சிம்பு சொல்லியிருக்கிறார்.
மேலும் அன்புக்கான பாடலாக, உலகத்தின் அன்பு கீதமாக இந்த பாடல் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.நேற்று வெளியான இப்பாடல், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில் தனுஷின் கொலவெறி பாடல், அவரை பிரதமர் விருந்தில் பங்கேற்கும் அளவுக்கு கொண்டு போய் நிறுத்தியுள்ளது.
இதனால் புகழின் உச்சியில் இருக்கிறார் தனுஷ். அதேபோல் சிம்புவும், தனுஷூக்கு நிகராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சி தான், இந்த உலக அமைதி பாடல் என்கிறது விவரமறிந்த வட்டாரம்.
நண்பன் - முன்னோட்டம்
கஞ்சா கருப்பு படத்தில் வெளிநாட்டு நட்சத்திரங்கள்
மெளன குரு - சினிமா விமர்சனம்
அதிகார வர்க்கம் நினைத்தால் ஒரு சாமான்யனை எப்படி, எப்படி எல்லாம் படுத்த முடியம் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்து காட்டியிருக்கும் கலக்கலான, கதையம்சம் உடைய படம் தான் "மெளன குரு" மொத்தமும்!
எந்த தப்புமே செய்யாதே ஹீரோ அருள்நிதி, போலீஸ் செய்யும் தொடர் தவறுகளால் அதோகதி ஆகிறார்! அதற்காக ஆக்ஷன் அவதாரம் எடுத்து போலீஸை, அருள்நிதி அடித்து துவம்சம் பண்ணுகிறார்... இதுதானே மெளனகுரு கதை... என நீங்கள் யூகித்தால் அதுதான் இல்லை!
பொல்லாத போலீஸை பொறுப்புள்ள பெண் போலீஸ் ஒருவரே பார்த்து கொள்கிறார். அருள்நிதி, காதல், கல்லூரி, என மவுனமாக தன் கடமையை செய்வதோடு சரி! இதுதான் காட்சிக்கு காட்சி அடுத்து என்ன நடக்குமோ? என எதிர்பார்ப்பை கூட்டி விடும் மெளன குரு படத்தின் பெரிய ப்ளஸ்!
பன்ச் டயலாக், வாயில் சதா சர்வ காலமும் புகையும் சிகரெட், சரக்கு, சைடீஸ், சப்போர்ட்டுக்கு சுற்றிலும் நான்கு காமெடி பீஸ் என ஹீரோயிசம் காட்டும் ஹீரோக்களுக்கு மத்தியில் இது எதுவுமே இல்லாமல் மெளனமாகவே படம் முழுக்க நடித்து ஹீரோவாகவே வாழ்ந்திருக்கிறார் அருள்நிதி!
ஹீரோயின் இனியாவும், தன் பங்கிற்கு இயல்பாக நடித்து சபாஷ் வாங்கிவிடுகிறார். ஆனாலும் மருத்துவக்கல்லூரி மாணவி தன் வருங்கால மணாளனுக்கு என்ன விதமான இன்ஜக்ஷ்ன் போடப்படுகிறது? எதுமாதிரி ட்ரீட்மெண்ட் தரப்படுகிறது? என்று கூட காலி இன்ஜக்ஷன் குப்பியை எடுத்து பார்க்காமலும், திடீரென மனநோயாளியாக மாற்றப்படும் ஹீரோ அருள்நிதிக்கு தரப்படும் சிகிச்சைகளை ஏரெடுத்துப் பார்க்காமலும் இருப்பது சுத்த போர்! இதை யதார்த்தமாக கதை சொன்ன இயக்குநர், நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!
ஃபோர்ஜரி போலீஸ்கள் ஜான் விஜய், பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி மூவரும் மிரட்டலாக நடித்திருக்கின்றனர் என்றால், வாயும் வயிறுமாக நேர்மையான பிள்ளைதாச்சி பெண் போலீஸாக வரும் உமா ரியாஸ்கான் அவர்களைக் காட்டிலும் மிரட்டலாக நடித்து படத்தை பக்காவாக தூக்கி நிறுத்தி இருக்கிறார்.
அம்மா சுஜாதா, மது, மென்ட்டல் ஆஸ்பத்திரியில் வரும் நண்பன் முருகதாஸ், ஹரிஷ் உள்ளிட்டவர்களும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு!
எஸ்.தமனின் இனிய இசை, மகேஷ் முத்துச்சாமியின் யதார்த்த ஒளிப்பதிவு உள்ளிட்ட இன்னும் பல ப்ளஸ் பாயிண்டுகளுடன் சாந்தகுமாரின் சறுக்காத எழுத்து இயக்கத்தில் "மெளனகுரு"விற்கு சுத்தமான, சத்தமான வெற்றி நிச்சயம்! மெளனகுரு - "மிரட்டல் குரு"