மன்மதன் பார்ட்-2 ; சிம்பு ஜோடியாக அனுஷ்கா

மன்மதன் வெற்றியை தொடர்ந்து சிம்பு இயக்க இருக்கும், மன்மதன் பார்ட்-2வில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவின் திரைக்கதையில், அவர் ஹீரோவாக நடித்த படம் மன்தமன். இப்படத்தில் சிம்பு ஜோடியாக ஜோ‌திகா நடித்து இருந்தார்.

கடந்த 2004ம் ஆண்டு வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. மன்மதன் படத்தின் இறுதிகாட்சியிலேயே, அதன் 2ம் பாகமாக தொடரும் என்பதை சிம்பாலிக்காக சொல்லியிருந்தார் சிம்பு.

ஒருபக்கம் தன்னுடைய வேட்டை மன்னன், போடா போடி, வாலு படங்களில் பிஸியாக இருந்தாலும், மற்றொரு பக்கம் மன்மதன் 2-க்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் சிம்பு.

இம்முறை படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் டைரக்ஷ்ன் ‌பொறுப்பையும் அவரே ஏற்றுள்ளார்.

மன்மதன்-2வில் ஜோதிகா ரோலில் யார் நடிப்பார் என்று கோலிவுட்டில் பரவலாக ‌கேள்வி எழுந்த நிலையில், இப்போது அந்தரோலில் அனுஷ்கா நடிப்பார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

ஏற்கனவே சிம்புவும்-அனுஷ்காவும் வானம் படத்தில் நடித்து இருந்தனர்.

அதன்பிறகு இப்போது மீண்டும் இப்படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் சந்தானமும் நடிக்கவுள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...