சமீபத்தில் சத்யம் தியேட்டரில் ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, சென்னை - ஆயிரம் விளக்கு அண்ணாசாலை பகுதியில் தனது பி.எம்.டபிள்யூ காரில் திரும்பினார் இயக்குநர் விஜய்.
அங்கு சாலையில் காத்திருந்த போக்குவரத்து போலீஸார் காரை கையை காட்டி நிறுத்தி, அந்த காஸ்ட்லீகாரின் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த கறுப்பு பலிம் ரோல்களை அகற்றாமைக்காக அபராதம் போட்டுவிட்டனர்.
நான் "கிரீடம்", "மதராசப்பட்டினம்", "தெய்வத்திருமகள்" படங்களின் இயக்குநர் என விஜய் எவ்வளவோ எடுத்து சொல்லியும், எங்கெங்கோ போன் செய்தும் போலீஸார் விடுவதாக இல்லை. கடைசியாக, பைன் தொகையை கட்டிவிட்டு பி.எம்.டபிள்யூவை கிளப்பி சென்றார் விஜய். பாவம்!
0 comments:
Post a Comment