ரஜினி காமெடியில் கலக்கி, சூப்பர் ஹிட்டான தில்லு முல்லு படம் இப்போது ரீ-மேக் ஆக இருக்கிறது. இதில் ரஜினி நடித்த வேடத்தில் சிவா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி, மாதவி, தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சவுகார் ஜானகி, பூர்ணம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலரது நடிப்பில் 1980களில் வெளிவந்த படம் தில்லு முல்லு.
ரஜினி இரண்டு கெட்டப்புகளில் தேங்காய் சீனிவாசனிடம் மாறி மாறி நடித்து காமெடியில் அசத்தியிருந்தார்.
மேலும் இப்படத்தின் க்ளைமாகஸ் காட்சியில் நடிகர் கமலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றினார்.
ரஜினி முழுக்க முழுக்க காமெடியில் கலக்கி சூப்பர் ஹிட்டான படம் இது. இப்படம் இப்போது மீண்டும் ரீ-மேக் ஆக இருக்கிறது.
இதில் ரஜினி நடித்த வேடத்தில் சென்னை 600028, தமிழ்படம், சரோஜா, கலகலப்பு படங்களின் நாயகன் சிவா நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து சிவா கூறியுள்ளதாவது, சூப்பர் ஸ்டார் நடித்த தில்லு முல்லு படத்தில் நான் நடிக்க இருப்பது உண்மைதான்.
அவர் நடித்த வேடத்தில் நான் நடிக்கிறேன் என நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. அதேசமயம் அவர் பெயரை கெடுக்காமல் நடிக்க வேண்டும் என்று எண்ணும்போது கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment