யுடிவி நிறுவனம் தயாரிப்பில் ஜீவா நடித்துள்ள புதிய படம் முகமூடி. டைரக்டர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான இப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகவுள்ளது.
ஜீவா ரசிகர்களுக்கு விருந்தாக அமையவுள்ள இப்படம் குறித்து ஜீவா அளித்துள்ள பேட்டியில், முகமூடி ஒரு சூப்பர் ஹீரோ பார்மூலா படம்.
தமிழில் இது மாதிரியான படம் வருவது இதுவே முதன்முறையாகும். இதில் நான் அணியும் காஸ்ட்யூம், ஹாங்காங்கில் உள்ள பெரிய சர்க்கஸ் கம்பெனியால் வடிவமைக்கப்பட்டதாகும்.
11 கிலோ எடை கொண்ட இந்த எடை சிலிக்கான் கலந்து செய்யப்பட்டதாகும்;. தொடர்ந்து 16 நாட்கள் தினமும் இதை போட்டுக்கொண்டு நடிக்கவும் சண்டை போட்டதால் காலிலும் கழுத்திலும் கட்டி ஏற்பட்டது. முகம் சிவப்பானது.
முகமூடியை தொடர்ந்து நீதானே என் பொன் வசந்தம், என்றென்றும் புன்னகை, டேவிட் மற்றும் ரவி கே.சந்திரன் இயக்கும் படங்களில் நடிக்கிறேன். .
டேவிட் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறேன். எனது படங்களுக்கு ஆந்திராவில் வரவேற்பு இருப்பதால் தெலுங்கிலும் ரிலீஸ் செய்கிறோம்.
குழந்தைகளுக்கான 3டி படமொன்றில் நடிக்க ஆர்வம் உள்ளது, என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment