ஸ்ரீதேவி நடித்து வரும் இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில், கெஸ்ட் ரோலில் நடிகர் அஜித் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு சினிமாவை கலக்கிய ஸ்ரீதேவி, பின்னர் இந்தி திரையுலகிலும் கால்பதித்து, அங்கும் முத்திரை பதித்தார்.
பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமா வாய்ப்புகளை குறைத்து கொண்ட ஸ்ரீதேவி, இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தில் நடிக்கிறார்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் அமெரிக்கா செல்லும் ஸ்ரீதேவி, அங்கு மொழி பிரச்னையால், ஆங்கில மொழியை திக்கி திணறி பேசி அங்குள்ளவர்களால் கிண்டல்களுக்கு ஆளாகிறார்.
பின்னர் அதை சவாலாக ஏற்று முறைப்படி ஆங்கிலத்தை பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். இதுவே இப்படத்தின் கதை. கவுரி ஷிண்டே இயக்கும் இப்படத்தை பால்கி தயாரிக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் முதல் ஸ்டில்லை வெளியிட்டனர் படக்குழுவினர். ஸ்ரீதேவிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் இப்படத்தை தென்னிந்தியாவிலும் வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர்.
ஏற்கனவே இந்தி இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அமிதாப் ஒரு முக்கிய கேரக்டரில் தோன்றவுள்ளார். அதேப்போல் தமிழ்-தெலுங்கு மொழியில் உருவாக இருக்கும் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அமிதாப் நடித்த கேரக்டரில் டாப் ஸ்டார் ஒருவரை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்தது.
அதன்படி ஆரம்பத்தில் அமிதாப் ரோலில் ரஜினியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. ரஜினியுடன் ஸ்ரீதேவி நிறைய படங்களில் நடித்துள்ளதாக அவர் இந்த கேரக்டருக்கு செட் ஆவார் என்பது படக்குழுவின் நம்பிக்கை. ஆனால் ரஜினியோ மறுத்துவிட்டாராம்.
இந்நிலையில் ரஜினிக்கு பதில் அந்த கேரக்டரில் இப்போது அஜித்தை நடிக்க பேச்சுவார்ததை நடத்தி வருகி்ன்றனர். இதனை படக்குழுவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
டாப்ஸ்டார் ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இன்னும் ஓரிரு நாளில் முடிவாகிவிடும் என்றும், இதற்கான அறிவிப்பு முறைப்படி ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment