ஷாரூக்கானின் ரா-ஒன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் வந்து போன நடிகர் ரஜினி, அடுத்தப்படியாக அமீர்கான் படத்தில் ஒரு பாடலில் தோன்ற போகிறாராம்.
கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ரஜினி இப்போது தனது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் அமீர்கான் தான் நடிக்கவுள்ள புதியபடமான தலாஷ் என்ற படத்தில் ரஜினியை ஒரு பாடலில் நடிக்க வைக்க எண்ணியுள்ளதாகவும், இதற்காக அவருக்கு பெருந்தொகை அதாவது இந்த ஒரு பாட்டுக்கு மட்டும் ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பல்வேறு நாடுகளில் பெருந்தொகை செலவில் இந்தப் பாடல் காட்சி பிரம்மாண்டமாக படமாகப் போகிறார்களாம்.
மேலும் இந்தப்பாட்டில் ரஜினியுடன் அமிதாப், தர்மேந்திரா போன்ற பாலிவுட் பிரபலங்களும் தோன்ற இருக்கிறார்களாம்.
ஏற்கனவே அமீர்கான் தன்னுடைய தூம்-3யில் ரஜினியை நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment