முகமூடி ஆடியோவை சத்யம் சினிமாவில் விஜய்-புனித்ராஜ்குமார் உள்ளிட்ட வி.ஐ.பி.கள் மூலம் ஒரு சில நாட்களுக்கு முன் காலையில் ரிலீஸ் செய்துவிட்டு அன்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் ப்ரீவியூ திரையரங்கில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் முகமூடியின் எழுத்தாளரும், இயக்குநருமான மிஸ்கின்.
இது எனது கனவுப்படம், சின்னவயது முதல் நான் கனவு கண்டிருந்த கதை இது. ஸ்கூல்டேஸில் நான் பாடப்புத்தகங்களை படித்ததைவிட காமிக்ஸ் புத்தகங்களை படித்து வளர்ந்தவன். இப்படி ஒரு கதையை படம் பண்ண வேண்டும் என்றதும் இந்த கதையை கோடம்பாக்கத்தில் என்னிடம் கேட்காத ஹீரோக்களே கிடையாது.
விஜய், விஷால், சிம்பு என்று பல ஹீரோக்களுக்கும் இந்த கதையை நான் சொல்லி இருக்கிறேன். ஆனால் அது ஜீவா நடிக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது. அவர் நான் எதிர்பார்த்ததைவிட பிரமாதமாக நடித்து இருக்கிறார். இந்தபடத்திற்கு பின் அந்த தம்பிக்கு பெரிய பிரேக் கிடைக்கும். சூப்பர் ஹீரோவின் டிரஸ்ஸை மாட்டிக்கொள்வதற்கே தனி பலம் வேண்டும்.
அந்த உடையை 92 நாட்கள் மாட்டிக்கொண்டு ஜீவா பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது. அவ்வளவு ரிஸ்க் எடுத்து நடித்தார் மனிதர். அவரை மாதிரியே இந்தப்படத்திற்காக நாயகி பூஜா ஹெக்டே, சகநட்சத்திரங்கள் நரேன், நாசர், செல்வா உள்ளிட்டவர்களும், இசையமைப்பாளர் கே, ஒளிப்பதிவாளர் சத்யா உள்ளிட்ட ஒவ்வொருவரும் அவர்களது இணை, துணை உதவியாளர்களும் முகமூடிக்காக உழைத்திருக்கின்றனர்.
அத்தனை பேருக்கும் இந்த தருணத்தில் நன்றி! என்று அப்படி, இப்படி பேசிக்கொண்டே போன மிஷ்கினை மடக்கி விவரமான நிருபர் ஒருவர், எல்லாம் சரி, இதுவரை வெளிவந்த இந்த படத்தின் பப்ளிசிட்டிகளில் நடிகர் ஜீவாவின் பெயர், உங்களது பெயர், தயாரிப்பாளர்களின் பெயர் தவிர மற்றவர்களின் பெயர்கள் முகமூடிக்குள்ளேயே மறைக்கப்பட்டிருப்பதின் காரணம் என்ன...? என எக்குதப்பாக கேட்க மனிதர் அலட்டிக்கொள்ளாமல், நான் ஜீவாவின் முகமூடி என்று கூட போட வேண்டாம் என்று தான் சொன்னேன்.
ஜீவா தரப்பு தான் அதை கேட்கவில்லை. அவ்வளவு ஏன் என் பெயரை கூட நான் விரும்பவில்லை, ஆனால் தனஞ்செயன் கேட்கவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த மாதிரி படங்களுக்கு ரசிகர்கள் வருவது தான் சரியாக இருக்கும் என்றார் மிஷ்கின்.
உடனே அவரை முந்திக்கொண்டு யு.டி.வி. தென்னிந்திய தலைமை அதிகாரி தனஞ்ஜெயன் எங்களுக்கும் எல்லோரது பெயரையும் பத்திரிக்கை விளம்பரங்களில் போட வேண்டும் என்று ஆசை தான்!
ஆனால் விளம்பரங்களை அத்தனை பெரிசாக கொடுக்காதே, இத்தனை சிறியதாக கொடு என்று தமிழ் திரையுலகில் சகட்டுமேனிக்கு சகலரும் சொல்லுவதால் விளம்பரங்களில் பல டெக்னீஷியன்களின் பெயர்களை இடம் பெற செய்யமுடியவில்லை என்றார்.
அதற்காக முகமூடி படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யா, இசையமைப்பாளர் கே இவர்களது பெயர்கள் எல்லாம் கூட இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது ரொம்பவே ஓவருங்க தனஞ்ஜெயன்!
1 comments:
உங்களது பதிவுகளை அழஹி.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் இப்படிக்கு
Azhahi.Com
இப்படிக்கு
Azhahi.Com
Post a Comment