கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு திரைப்படத்தின் அமெரிக்க உரிமை ரூ 3 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
கமல் படங்களுக்கு வெளிநாடுகளில் ஓபனிங் என்பது தசாவதாரம் வரை இல்லாமல் இருந்தது. தசாவதாரத்துக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து உன்னைப்போல் ஒருவனும் வெளிநாடுகளில் வெளியானது.
இப்போது மன்மதன் அம்பு படத்தின் அமெரிக்கா மற்றும் கனடா உரிமை ரூ 3 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. கமல் படங்களைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய விலையாகும்.
இதற்கு முன் அவரது தசாவதாரத்துக்கு ரூ 1.5 கோடி தரப்பட்டது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கமல், த்ரிஷா, மாதவன், சங்கீதா, ஓவியா நடித்துள்ளனர்
1 comments:
அருமையாக இருக்கிறது..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
Post a Comment