கமல், திரிஷா, ரவிக்குமார் மீது போலீசில் புகார்

இந்து சமய உணர்வுகளை புண்படுத்தும் வகையில், பாடல் எழுதியுள்ள, நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ரவிக்குமார், நடிகை திரிஷா ஆகியோர் மீது, உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, இந்து மக்கள் கட்சியின், மாநில அலுவலக செயலர் குமரவேல் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:மலேசியாவில், "மன்மதன் அம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இப்படத்தில், நடிகர் கமல்ஹாசன், " கண்ணோடு... எனத் துவங்கும் பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

இப்பாடல், மிகுந்த ஆபாசமாகவும், அருவருக்கத்தக்கதாகவும் தமிழ் பெண்களை கோபப்படுத்தும் வகையிலும் உள்ளது.இந்து சமய உணர்வுகளை கொச்சைப்படுத்துவதாகவும், தமிழ் வேதமான பிரபந்தம் குறித்து அவதூறு பரப்பும் நோக்கத்திலும் பாடல் எழுதப்பட்டுள்ளது.

தமிழ் பெண்களின் வரலட்சுமி நோன்பை அசிங்கப்படுத்தும் வகையிலும், வக்கிரமான பாலுணர்வுகளைத் தூண்டும் வகையிலும் அமைந்துள்ள இப்பாடலில், இந்து கடவுளான ரங்கநாதர் குறித்தும் அவதூறு செய்யப்பட்டுள்ளது.


உலகெங்கிலும் உள்ள தமிழ் பெண்கள், இப்பாடல் குறித்தும், பாடல் காட்சியில் நடித்த நடிகையர், இயக்குனர் உள்ளிட்டோர் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எனவே, பாடலை எழுதிய கமல்ஹாசன் மீதும், மத உணர்வுகளை புண்படுத்துதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், வக்கிரமாக பாலுணர்வுகளை தூண்டுதல் ஆகிய குற்றங்களை செய்ததற்காக, நடிகை திரிஷா, இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் மீதும் வழக்கு பதியும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், இப்பாடல் வரிகள், படத்தில் இடம் பெறாமல் நீக்குவதற்கு உரிய நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

1 comments:

lcnathan said...

IF THE SONG IS HAVING DEROGATORY REMARKS ON THE FAITH OF HINDUS, THEN IT SHOULD BE BANNED. KAMAL IS THINKING TOO MUCH OF HIMSELF.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...