நான் ஏன் பிரபுதேவா போன்று வயதான நபரை கல்யாணம் பண்ண வேண்டும். அவர் என்னுடைய அண்ணன் மாதிரி என்று நடிகை ஹன்சிகா மோத்வானி கூறியுள்ளார்.
கோலிவுட்டை தற்போது கலக்கி வரும் ஹாட் நியூஸ் பிரபுதேவா-நயன்தாரா தான். பிரபுதேவா தமது மனைவி ரமலத்தை விட்டு நடிகை நயன்தாராவுடன் சுற்றிக்கொண்டு வருகிறார். இருவரும் திருமணமே செய்து விட்டனர் என்று கூட செய்திகள் வந்தது.
இப்பிரச்சனையே ஓயாத நிலையில் அடுத்த திருப்பமாக பிரபுதேவாவுக்கும், ஹன்சிகா மோத்வானிக்குக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும், இருவரும் ஒன்றாக சுற்றிவருவதாகவும், இதனால் நயன்தாராவுக்கும்-பிரபுதேவாவுக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கோலிவுட்டை ஒரு செய்தி வலம் வந்து கொண்டுகிறது.
பிரபுதேவா தற்போது ஜெயம் ரவி-ஹன்சிகா மோத்வானியை வைத்து தமிழில் எங்கேயும் காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரபுதேவாவுக்கும், ஹன்சிகா மோத்வானிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பிரபுதேவாவை, நயன்தாரா வெறுக்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.
இதனிடையே இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை ஹன்சிகா மோத்வானி கூறியுள்ளார்.
அதாவது பிரபுதேவா தமக்கு அண்ணன் மாதிரி என்றும், அவருக்கு நான் தங்கை மாதிரி என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி நான் ஏன் பிரபுதேவாவை போன்று வயதான நபரை கல்யாணம் பண்ண வேண்டும்? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
எது எப்படியோ உங்களுடைய இந்த உறவு அண்ணன், தங்கை உறவாக இருந்தால் நல்லது தான்.
0 comments:
Post a Comment