தமிழ் சினிமாவில் சில வெற்றிப்படங்களை இயக்கிய, ஆட்டோகிராப் நடிகர் தன்னிடம் உதவி இயக்குனர்களாக சேருபவர்களிடம் ரூ. 5 லட்சம் கேட்கிறாராம்.
முற்போக்கு சிந்தனையுடன் படம் எடுக்கும் அந்த இயக்குனரிடம் உதவியாளராக சேருபவர்கள் ஒரே படத்துடன் ஓட்டம் பிடித்து விடுகிறார்களாம்.
இதனால் அவர்களை தன்னிடம் தக்க வைப்பதற்கான முயற்சியாகத்தான் இப்படி வசூலில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதாகப்பட்டது... இவரிடம் உதவி இயக்குனராக சேர விரும்புபவர்கள் ரூ. 5 லட்சம் டெபாசிட் கட்ட வேண்டும்.
அதோடு தொடர்ச்சியா 3 படங்களில் வேலை பார்க்கணும். 3 படங்கள் முடிந்த பிறகு கான்டாக்ட் சர்டிபிகேட்டுடன் ரூ.5 லட்சம் பணத்தை திருப்பிக் கொடு்ப்பது என முடிவு எடுத்திருக்கிறார் அவர்.
இயக்குனரின் இந்த முடிவு சினிமாவுக்காக ஊரை விட்டு, வேலையை விட்டு சென்னைக்கு ஓடி வந்து, ஒரு வேளை சாப்பாட்டுக்கும், ரூம் வாடகைக்கும் அல்லாடிக் கொண்டு, இயக்குனர் கனவுடன் காலம் தள்ளிக் கொண்டிருக்கும் இளைஞர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
0 comments:
Post a Comment