அவமானப்பட்டும் அவமானப்படுத்தும் ஆர்யா

ஜீவா இரட்டை வேடங்களில் நடிக்கும் சிங்கம்புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. சினிமா வி.ஐ.பி.கள் கலந்து கொண்ட இவ்விழாவில் ஜீவாவின் நண்பர் எனும் முறையில் கலந்து கொண்டனர் ஜெயம்ரவி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்கள்.

அதில் ஆர்யா மட்டும் வாயில் சூயிங்கத்தை போட்டு மென்ற படி ஆஃப் டிரவுசருடன் அநாகரீகமாக மேடை ஏறியது மேடையில் இருந்த வி.ஐ.பி.களுக்கு மட்டுமல்ல அந்த திரையரங்கில் குழுமியிருந்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை தந்தது. பால்கனியில் இருந்த ஒரு ரசிகர் ஏன் ஆர்யா உங்களுக்கு முழு பேண்ட் கிடைக்கலியா? என்று கேட்டே விட்டார்.

அதற்கு மேடையில் பேசும் போது பதில் அளித்த ஆர்யா துபாய்நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கேற்றுவிட்டு நான், ஜீவா, ஜெயம்ரவி எல்லோரும் விமானத்தில் இருந்து அப்படியே வந்து விட்டோம அது தான் ஆஃப்டிரவுசர் என்று சமாளித்தார்.

அதே விமானத்தில் வந்த ஜெயம்ரவி ஜீவா உள்ளிட்டவர்கள் எல்லாம் மேடை ஏறப் போகிறோம் என்று பேண்ட் - சட்டையுடன் உஷாராக வந்து விழாவில் கலந்து கொள்ள ஆர்யாவுக்கு அந்தபயம் இல்லாததும் எடுத்துப்போடும் ஃபேண்ட்டில் ஒன்றை பேக்கில் இருந்து எடுத்து மாட்டிக் கொண்டு வர மனமில்லாததும் ஏன்? என்பது புரியாத புதிர்தான்!

சமீபத்தில் ஆர்யா வெளிநாட்டில் நடந்த மலையாள பட தமிழ் பட உலகையும் தமிழ் நடிகர்களையும் அநாகரீகமாக பேசி அவமானப்பட்டு வரும் சுவடு மறைவதற்குள்ளாகவே வி.ஐ.பிகள் தமிழ் சினிமா மேடையையும் இவ்வாறு அவமானப்படுத்தி இருப்பது வேதனைக்குரிய விஷயம் தான்! சேட்டன் திருந்துவது போல் தெரியலை‌‌யே?!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...