விஜய்யின் காவலன் படத்தை திரையிட விடமாட்டோம் என்று தியேட்டர் அதிபர்கள் தெரிவி்த்துள்ளனர். சமீபத்தில் விஜய் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை குறிப்பாக கடைசியாக வந்த சுறா படம் தியேட்டர் அதிபர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இதனால் இப்படத்திற்கு விஜய் நஷ்டஈடு வழங்க வேண்டும் தியேட்டர் அதிபர்கள் போர்க்கொடி தூக்கினர்.
இப்பிரச்சனையே இன்னும் முடிவு பெறாத நிலையில் விஜய்யின் அடுத்த படமான காவலன் படம் இம்மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தை திரையிட விடமாட்டோம் என்று தியேட்டர் அதிபர்கள் எதிர்த்துள்ளனர். கோவையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கூட்டம் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.
அதில் சுறா படத்திற்கு நடிகர் விஜய் உரிய நஷ்ட ஈட்டு தொகையை வழங்கும் வரை காவலன் படத்தை திரையிட கூடாது என்று முடிவு செய்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் தான் காவலன் படத்தை வெளிநாட்டில் வெயிடுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. தற்போது இப்பிரச்சனை ஒரு வழியாக தீர்ந்து கோர்ட் தடையும் நீங்கியது.
இந்நிலையில் தியேட்டர் அதிபர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் படம் இம்மாதம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
0 comments:
Post a Comment