தல அஜித் 1980-களில், பீக்கில் இருந்த ஹாலிவுட் ஹீரோ அல்பச்சுனோவின் தீவிர ரசிகர் ஆவார். தல நடித்து இன்னும் இரு தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கும் பில்லா-2வின் கதையும், அஜித்தின் ஆஸ்தான ஹீரோ அல்பச்சுனோ நடித்து 1983ம் வருடத்தில் ஹாலிவுட்டில் வெளிவந்த ஸகார்பேஸ் படத்தின் கதையை தழுவிதான் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
அதில் ஹீரோ அல்பச்சுனோ கியூபா நாட்டிலிருந்து அமெரிக்காவில் அகதியாக தஞ்சம் புகுந்து, அங்கே மியாமி பீச் பகுதிகளில் போதை பொருள் கடத்தல் மன்னனாக வளர்ந்து ஆளாக, அதில் கிடைக்கும் பணத்தில் கியூபா புரட்சி போருக்கு உதவிடும் கேரக்டரில் நடித்திருப்பார்.
அதேப்போல் பில்லா-2வில் தல அஜித் இலங்கை அகதியாக இந்தியாவில் தஞ்சம் புகுந்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு இண்டர்நேஷனல் அளவில் ஈழப்புரட்சிக்கு உதவுவதாக கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறதாம்! நெசந்தானா தல...?
இதனிடையே ஜூலை 13ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் பில்லா-2விற்கான ரிசர்வேஷன் தொடங்கி இருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி இன்னும் ஒருவார காலத்திற்கு சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பிற மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் பில்லா-2-க்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளதாம்.
மேலும் சென்னையில் மட்டும் ஒரு டிக்கெட்டின் விலை சுமார் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
1 comments:
thala ajith http://www.kollywoodthendral.in
Post a Comment