நவீன சரஸ்வதி சபதம் - சினிமா விமர்சனம்

குடி குடியைக் கெடுக்கும் எனும் மெசேஜை கடவுள்களை சாட்சியாக வைத்துக்கொண்டு காமெடியாக சொல்ல வந்திருக்கும் திரைப்படம்.


பரம்பரை பரம்பரையாக சித்த வைத்தியம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர் டாக்டர். ராமராஜன் எனும் ஜெய். கரகரப்பு குரலுக்கு சொந்தக்காரரான கணேஷ் எனும் விடிவி கணேஷ், பொம்பளை தாதா எமி சொர்ணாக்காவின் வெத்துவேட்டு கணவர், கோபி எனும் சத்யன், ஊரையே வளைத்துப்போடும் எம்.எல்.ஏ.,வின் வாரிசு, கிருஷ்ணா எனும் ராஜ்குமார், நடித்தால் நாயகராக மட்டுமே நடிப்பேன் எனும் பிடிவாதத்தில் வாய்ப்பு தேடி ஊரை சுற்றி வருபவர். 

இந்த நால்வரும் வயது வித்தியாசம் பாராத நெருங்கிய நண்பர்கள். காரணம், குடி. நின்றால் குடி, உட்கார்ந்தால் குடி... என மொடா குடிகாரர்களாக மாற இருக்கும் நால்வரையும் திருத்த நினைக்கிறார் சிவபெருமான். (கடவுள் தாங்க...!)



லேகிய டாக்டர் ராமராஜன் எனும் ஜெய்க்கு, அவர் விரும்பும் பாடகியுடன் இரண்டு வருட ஒன் சைடு லவ் சக்சஸ் ஆகி இருவருக்கும் திருமண தேதி குறிக்கப்படுகிறது. நண்பர்கள் பேச்சுலர் பார்ட்டி கேட்கின்றனர். 

ஜெய்க்கு திருமணம் மாதிரி நால்வருக்கும் உள்ளூரில் வெவ்வேறு கமிட்மென்ட்டுகள் ஒரு சில நாட்களில் இருந்தாலும் அதையெல்லாம் வந்து பார்த்து கொள்ளலாம், தண்ணீரில் மிதந்தபடி தண்ணியில் மிதக்கலாம் எனும் பார்ட்டி மூடில், தாய்லாந்து - பாங்காக் பறக்கின்றனர். 

நால்வருக்கும் பாடம் புகட்ட நினைக்கும் சிவபெருமான், தன் திருவிளையாடலால் அங்கு இவர்களை கடலில் தள்ளி, ஆளில்லா தீவில் கரை ஒதுங்க வைக்கிறான்! 

அப்புறம்?... அப்புறமென்ன? ஒரு ஆறு மாத காலம் அங்கு உண்ண, உறங்க, உடுத்த தேவையானவை இன்றி அல்லல்படும் நால்வரும் ஊர் திரும்பினரா? உயிரை விட்டனரா? என்பது கிளைமாக்ஸ்!



பாரம்பரிய வைத்தியர்களாக டாக்டர் ராமராஜன் - ஜெய்யும், அவரது அப்பா டாக்டர் சித்ரா லட்சுமணனும் வரும் ஆரம்ப காட்சிகளில் தியேட்டரே சிரிப்பொலியில் அதிர்கிறது. 

அதுவும், 15 தலைமுறைக்கும் மேலான பாட்டன், பூட்டன் சித்த வைத்திய தாத்தாக்களின் போட்டாக்களை சுவற்றி மாட்டியிருப்பது போன்று போட்டாக்களை காட்டி, சித்ரா லட்சுமணனையும், ஜெய்யையும் அறிமுகம் செய்யும் இடமே செம காமெடி! 



இதே போன்று வீட்டுல எலி வெளியில புலி விடிவி கணேஷிற்கு ஊர் தரும் மரியாதைக்கான காரணம், எம்.எல்.ஏ., மகன் சத்யனின் எம்.பி., கனவு, ராஜ்குமாரின் நடித்தால் நாயகர் ஆசை எல்லாம் தியேட்டரை சிரிப்பில் ஆழ்த்துகின்றன!



நாயகர் ஜெய், விடிவி கணேஷ், சத்யன், ராஜ்குமார், கதாநாயகி நிவேதா தாமஸ், எமி- சொர்ணாக்கா உள்ளிட்ட பூலோக பாத்திரங்கள், நட்சத்திரங்கள் மாதிரியே சிவபெருமானாக வரும் சுப்பு பஞ்சு, பார்வதி தேவியாக வரும் தேவதர்ஷினி உள்ளிட்ட தேவலோக பாத்திரங்களும் நட்சத்திரங்களும் கூட போட்டி போட்டு சிரிப்பை வரவழைப்பது தான் நவீன சரஸ்வதி சபதம் படத்தின் பலம், பலவீனம் எனலாம். 

அதிலும் ஜெய், டி.வி.,யில் எனது நிகழ்ச்சியை பார்த்து விட்டு சொல் என்று வருங்கால மனைவியிடம் சொல்ல, அதை நம்பி நிவேதா தாமசின் மொத்த குடும்பமும் டி.வி., பெட்டியின் முன் அமர்ந்து டாக்டர். ஜெய் வழங்க இருக்கும் அந்தரங்க கேள்வி பதில் நிகழ்ச்சியை ஆர்வமுடன் காண காத்திருக்கும் காமெடி ஹைலைட் காமெடி!



ஜெ. ஆனந்தின் ஒளிப்பதிவில் பின்பாதியில் வரும் தாய்லாந்தின் அழகு ஆனந்தம். பிரேமின் இசையில் பாடல்கள் பெரிதாய் மனதில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் பிரமிக்க வைத்து விடுகிறார் மனிதர். 



குடியை கெடுக்கும் குடியை ஒழிக்கிறேன் பேர்வழி என முன்பாதி முழுவதும் குடிக்காட்சிகளை காண்பித்திருக்கும் இயக்குநர் கே. சந்துரு, சிவபெருமானின் திருவிளையாடல்களால் நால்வரையும் திருத்த நினைப்பது ஓ.கே.! 

ஆனால் அதற்கு நவீன திருவிளையாடல் என்றல்லவா பெயர் வைத்திருக்க வேண்டும்! நவீன சரஸ்வதி சபதம் என்பது சற்றே இடிக்கிறது. 



இது மாதிரி ஒரு சில லாஜிக் மிஸ்டேக்குகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால் புதியவர் கே. சந்துருவின் எழுத்து இயக்கத்தில், நவீன சரஸ்வதி சபதம் - நல்ல சிரிப்பு சப்தம்!.

வெங்கட்பிரபுவிடம் வில்லன் வேடம் கேட்ட அஜீத்-விஜய்

அஜீத்தின் 50வது படமான மங்காத்தாவை இயக்கிய பிறகுதான் வெங்கட்பிரபுவுக்கு முன்னணி இயக்குனர் என்ற ஒரு அங்கீகாரம் கிடைத்தது. 
அதனால் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து மேலும் சில முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டார். 

ஆனால், அது செட்டாகவில்லை. அதனால் கார்த்தியை வைத்து பிரியாணி படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் தனது பிறந்த நாளின்போது அஜீத்தை வெங்கட்பிரபு சந்தித்ததாகவும், அப்போது தனது அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதாகவும் செய்திக்ள பரவியுள்ளன. 

இதுகுறித்து வெங்கட் பிரபுவைக்கேட்டால், அவரை சந்தித்தது உண்மை. ஆனால் படம் குறித்து எதுவும் பேசிக்கொள்ளவில்லை என்கிறார்.

மேலும், அஜீத்- விஜய் இரண்டு பேரையும் சேர்த்து ஒரு படம் பண்ண வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். 

அதை நான் அவர்களிடம் சொன்னபோது இரண்டு பேருமே வில்லன் வேடத்தில்தான் நடிப்பேன் என்று சொன்னார்கள். 

ஆனால், அவர்கள் ரெண்டு பேரையும் சரிசமமான ஒரு கதையில் நடிக்க வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக உள்ளது. 

அதனால் அப்படியொரு நல்ல ஸ்கிரிப்ட் அமையும்போது கண்டிப்பா அவர்களிடம் ஓ.கே வாங்கி அதற்கான முயற்சியில் இறங்குவேன் என்கிறார் வெங்கட்பிரபு.

18 மாடி ஏற வைத்து நடிகையை கஷ்டப்படுத்திய இயக்குனர்

டெல்லி மாடல் அழகியை அழைத்துவந்து கும்கி வீரனுடன் ஜோடி சேர்த்து சினிமாவில் நடிக்க வைத்தனர். 

இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சிக்காக நடிகையை 18 மாடி ஏறி, இறங்க வைத்துவிட்டனராம். 

30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இந்த காட்சியில் ஒவ்வொரு நாளும் நடிகை மேலே ஏறி, இறங்கி ரொம்பவே கிரங்கிப் போனாராம். 

இயக்குனரிடமும், தயாரிப்பாளரிடமும் லிப்ட் வசதி ஏதாவது செய்துகொடுத்தால் நன்றாக இருக்கும் என நடிகை கெஞ்சிக் கேட்டும் யாரும் காது கொடுத்து கேட்கத் தயாராக இல்லையாம். 

கஷ்டப்பட்டால்தான் முன்னேற முடியும் என்பதற்காக இப்படியெல்லாமா கஷ்டப்படுத்துவது என நடிகை தனது நெருங்கியவர்களிடமெல்லாம் சொல்லி புலம்பி வருகிறாராம்.

பொங்கலுக்கு முன்பே பிரியாணி விருந்து

கார்த்தி, ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள பிரியாணியை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். 

தயாரிப்பாளர் ஸ்டூடியோ ஸ்கிரீன் ஞானவேல் ராஜாவுக்கும், டைரக்டர் வெங்கட்பிரபுவுக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. 

இதற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட ஆல்இன்ஆல் அழகுராஜா ரிலீசாகி தியேட்டரைவிட்டு ரிட்டனும் ஆகிவிட்டது.


அழகுராஜா சரியாக போகாததில் ஹீரோ கார்த்திக்கிற்கும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் வருத்தம். அதனால் சூட்டோடு சூடாக பிரியாணியை கொண்டு வந்து ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என்று கார்த்திக் விரும்புகிறார். 

இதனால் வெங்கட் பிரபுக்கும், தயாரிப்பாளருக்கும் இருந்த கருத்து வேறுபாட்டை முடிவுக்கு கொண்டு வந்தவர் படத்தை முடிக்க துரிதப்படுத்தி உள்ளார்.



பொங்கலுக்கு பிரியாணி விருந்து வைக்கலாம் என்று நினைத்திருந்தார்கள். 

ஆனால் பொங்கலுக்கு கோச்சடையான், வீரம், ஜில்லா போன்றவை களத்தில் இறங்குவதால் அதோடு போட்டியிட வேண்டாம் தனித்து வரலாம் என்று முடிவு செய்தனர். 

அதன்படி பிரியாணியை டிசம்பர் 20ந் தேதி ரிலீஸ் பண்ண ஏற்பாடு செய்து வருகிறார்கள். படத்தின் சேட்டிலைட் ரைட்ஸ் 10 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அரசியல் பஞ்ச், ஆடிப்போன தளபதி

சமீபத்திய நடிகர்களுக்கு நாலு படம் ஓடிவிட்டாலே அடுத்து நேரடியாக கோட்டையை பிடிச்சுட வேண்டியதுதான் என்கிற துணிச்சல் வந்து விடுகிறது. 
அதன்காரணமாக, அதுவரை அடக்கி வாசித்து வந்தவர்கள், பின்னர், ஆளுங்கட்சிக்கு எதிரான பஞ்ச் டயலாக்குகளை ஆவேசமாக எடுத்து விடுகிறார்கள். 

ஆனால் இப்படி தொடர்ந்து அவர்கள் அட்டாக் கொடுப்பதால்,அரசியல்வாதிகளின் அதிருப்திக்கும் ஆளாகிறார்கள்.

இப்படி சமீபத்தில் தான் நடித்த மூன்றெழுத்து படத்தின் மூலம் அரசியல் கட்சியின் எதிர்ப்பினை சம்பாதித்த தளபதி நடிகர், தனது புதிய படத்தில் அரசியல் என்ற வார்த்தைகூட இருக்கக்கூடாது என்று ஆரம்பத்தில் இருந்தே கேட்டுக்கொண்டு வருகிறாராம். 

ஆனால், சமீபத்தில் நடிகரை சந்தித்த மேற்படி பட டைரக்டர், ஒரேயொரு இடத்தில் மறைமுகமாக ஒரு அரசியல் பஞ்ச் வைத்தால் என்ன என்று வார்த்தைவிட, ஆடிப்போனாராம் தளபதி. 

அப்படியெல்லாம் எதையாவது செய்து படத்தை தியேட்டருக்கு வர விடாமல் செய்துவிடாதீர்கள் என்று கொதித்து விட்டாராம்.

ஆனபோதும், தனக்கான ரசிகர்கள் வசனங்களைக் கேட்டு ஆர்ப்பரிப்பார்கள். அவர்களின் கரகோஷத்தில் அரங்கமே அதிரும். 

ஆனால், இந்த படத்தில் அப்படி எதுவும் இல்லாததால் ரசிகர்கள் ஏமாந்து போவார்களே என்று பெரும் கவலையில் இருக்கிறாராம்.

விஜயசேதுபதியின் நன்றிக்கடன்

சினிமாவில் தலைகாட்டுவதற்கு முன்பு கூத்துப்பட்டறையில் கணக்காளராக வேலை பார்த்து வந்தவர்தான் விஜயசேதுபதி. அப்போது நண்பர் ஒருவர் எடுத்த குறும் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்க ஆள் இல்லாமல், விஜயசேதுபதியை நடிக்கச்சொன்னாராம். 

ஆனால் அந்த குறும் படத்தில் நடித்து முடித்தபோது, பலரும் பாராட்டினார்களாம். அங்கிருந்துதான் விஜயசேதுபதியின் நடிப்பு பயணம் ஸ்டார்ட் ஆகியிருக்கிறது.


அதன்பிறகு விஜய், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்து வந்திருக்கிறார். 

அப்போதுதான் தனது தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு புதுமுக நடிகர் தேடி வந்த சீனுராமசாமி, ஏற்கனவே சினிமாவில் முகம் காட்டியவராக இருந்தால் வேலை வாங்குவது எளிது என்று விஜயசேதுபதிக்கு சான்ஸ் கொடுத்திருக்கிறார். 

அப்படி ஹீரோவானவர்தான் விஜயசேதுபதி. ஆனால், இப்போது இளவட்ட நடிகர்களின் முன்னணியில் இருக்கிறார். அவர் தொட்டதெல்லாம் ஹிட் என்கிற நிலையாகி விட்டது.



இந்த நேரத்தில் நீர்ப்பறவை படத்தின் தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்காக, அப்படத்தில் நடித்த விஷ்ணுவைக்கொண்டே இடம் பொருள் ஏவல் என்றொரு படத்தை தற்போது இயக்கி வருகிறார் சீனுராமசாமி. 

இந்த படத்தில் விஜயசேதுபதி ஒரு கேரக்டரில் நடித்தால் தனது படத்துக்கு பலமாக இருக்குமே என்று அவரிடம் தயங்கியபடியே கேட்டாராம் சீனு.



அடுத்த நிமிசமே, நீங்கள் என்னிடம் தயங்கி கேட்க வேண்டுமா. நடி என்று சொன்னால் நடித்து விட்டுப்போகிறேன் என்று உடனே சம்மதம் சொன்னாராம் விஜயசேதுபதி. 

ஹீரோவாக நடிக்கவே கைநிறைய படங்கள் இருந்தபோதும், தனக்கு ஹீரோ என்கிற அங்கீகாரத்தை முதலில் கொடுத்த சீனுராமசாமிக்காக இப்படி நன்றிக்கடன் செய்கிறாராம் விஜயசேதுபதி.

3 விரல் காட்டும் பீட்சா நடிகர்


சினிமாவைப்பொறுத்தவரை காற்றுள்ளபோதுதான் தூற்றிக்கொள்ள முடியும். அதேபோல் எந்த நடிகர் பக்கம் காற்றடிக்கிறதோ அந்த நடிகருக்குத்தான் கேட்பதை விடவும் கூடுதல் சம்பளத்தைக்கொடுத்து சத்தமில்லாமல் புக் பண்ணுவார்கள் படாதிபதிகள். 

அந்த வகையில், இப்போது அந்த பீட்சா நடிகர் பக்கம் பலத்த காற்றடித்து வருகிறது. அவர் நடிக்கிற படங்களெல்லாமே ஹிட் லிஸ்டில் இடம்பெறுகிறது.

அதனால், இதுவரை கொடுப்பதை வாங்கிக்கொண்டு நடித்து வந்த அவரும், இப்போது 3 பெரிய விரலை காட்டுகிறாராம். 

அதற்கு சிலர் தயங்கி நின்றாலும், பலர் அவர் கேட்டதை மறுபேச்சு பேசாமல் கொடுத்து அவரை புக் பண்ணி வருகின்றனர். 

அப்படி கொடுப்பவர்கள், அந்த மெரினா நடிகரின் படங்களை விட பீட்சா நடிகர் நடிக்கிற படங்கள்தான் பெரிய அளவில் வசூலித்துள்ளன,

அப்படியிருக்க மெரினா நடிகர் 5 விரல்களை காட்டுகிறபோது, இவர் 3 விரல்களைதானே காட்டுகிறார் என்று பீட்சா நடிகருக்கு சாதகமாக பேசி வருகின்றனர். 

இதனால் தயங்கி நின்றவர்கள்கூட இப்போது பீட்சா பக்கம் திரும்பி நிற்கின்றனர். 

ரஜினியின் கோச்சடையான் ஓர் முன்னோட்டம்


சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையும் வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. 

அதற்கு முன்னால் அந்த பொங்கல் விருந்தில் என்ன இருக்கிறது என்பதை கொஞ்சம் டேஸ்ட் பார்க்கலாம்...

* கோச்சடையான் தென் தமிழகத்தில் சங்க காலத்தை ஒட்டி ஆண்ட ஒரு தமிழ் மன்னனின் வீரமிக்க படைத் தளபதி. அவரது மகன் ராணா. அப்பாவுக்கு வீரம் மட்டுமே சொத்து என்றால் மகனுக்கு வீரமும், நடனமும் சொத்து. 

* முதல் பகுதியில் கோச்சடையானின் ஆதிக்கம் இருக்கும். ஆர்வ கோளாறினால் மகன் ராணா சில வீரதீர காரியங்களில் இறங்கி எதிரிகளிடம் மாட்டிக்கொள்ள அவரை தனி ஆளாக எதிரியின் கோட்டைக்குள் சென்று கோச்சடையான் மீட்கும் காட்சியில் அனல் பறக்கும். 

எதிரிகளால் தந்தை கோச்சடையான் கொல்லப்பட தளபதி பொறுப்புக்கு வரும் ராணா ஆடும் ஆக்ஷன் ஆட்டம்தான் படத்தின் இரண்டாம் பகுதி.

* கோச்சடையான் ஜோடியாக ஷோபனா, ராணா ஜோடியாக தீபிகா படுகோனே. ராணாவின் டான்ஸ் மாஸ்டராக ருக்மணி. கோச்சடையானின் நண்பராக சரத்குமார், ராணாவின் நண்பராக ஆதி. வில்லன் ஜாக்கி ஷெராப். ராஜகுரு நாசர்.

* ஷோபனாவுக்கும், ராணாவுக்கும் நடக்கும் போட்டி நடனம் அரங்கத்தை அதிர வைக்கும்.

* படத்தின் ஆடை வடிவமைப்பு பொறுப்பை தேசிய விருது பெற்ற நீத்தாலுல்லு செய்திருக்கிறார். தமிழ் நாட்டின் பண்டைய ஆடைகளை கோவில் சிலைகளில் இருந்து படியெடுத்து வரைந்து கொடுத்திருக்கிறார். அதனையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

* ஏ.ஆர்.ரகுமான் இசையில் 6 பாடல்கள் இடம்பெறுகிறது. அதில் ஒன்று "எதிரிகள் இல்லை..." என்ற ரத்தத்தை சூடேற்றும் யுத்த பாடல். வைரமுத்துவின் பாடலை தமிழ், தெலுங்கில் பாடியிருப்பவர் ரஜினி. இந்தி பதிப்பில் பாடியிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான்.

* தமிழ் தெலுங்கு இரண்டிற்குமே ரஜினி டப்பிங் பேசியிருக்கிறார்.

* படம் ஓடும் நேரம் 125 நிமிடங்கள். இண்டர்வெல் கிடையாது.

* படத்தை 3டியிலும் வெளியிட இருக்கிறார்கள். இதற்கான பணிகள் சீனாவில் நடந்து வருவதால் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட படம் பொங்கலுக்கு வருகிறது.

கோச்சடையான் லேட்டா வந்தாலும் கண்டிப்பாக லேட்டஸ்ட்டா வருவான்.

சுள்ளானை டென்சன் செய்த பால் நடிகை


தளபதி நடிகருடன் டூயட் பாடுவதற்கு முன்பு வரை சீரியசான நடிகையாக இருந்தார் அந்த சிந்துசமவெளி பார்ட்டி. ஆனால், அந்த படத்திற்கு பிறகு அவரது நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்களாம். 

9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 12 மணிக்குத்தான் வருகிறாராம். இரண்டொரு சீனில் நடித்து முடிக்கும்போது, வாய் வலி, வயிற்று வலி என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி எஸ்கேப்பாகி விடுகிறாராம்.

இப்படி சுள்ளான் நடிகருடன் நடித்து வரும் படத்திலும் அம்மணியின் அலம்பல்கள் தொடர்கிறதாம். 

முதலில் இதை சகித்துக்கொண்ட நடிகர், சில நாட்களில் கேரவனை கொண்டு செல்ல முடியாத இடங்களுக்குகூட அது வந்தால்தான் நான் வருவேன் என்று அம்மணி குடைசச்ல் கொடுப்பதால் அவர் மீது செம டென்சனில் இருக்கிறாராம்.

இதனால் அடுத்து தனது பேனரில் தயாரிக்கயிருந்த படத்துக்கும் பால் நடிகையிடம் ஏற்கனவே பேசி வைத்திருந்த நடிகர், இப்போது அவரை இத்தோடு ஓரங்கட்டி விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டதோடு, நடிகையிடம் முகம் கொடுத்து பேசுவதையே குறைத்து வருகிறாராம்.

ரஜினி பிறந்த நாளில் கோச்சடையானுக்கு பதில் பரட்டை

வருகிற டிசம்பர் 12ந் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள். அன்று கோச்சடையான் ரிலீசாகவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதனால் ரஜினி ரசிகர்களும், பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். 

சில காரணங்களினால் கோச்சடையான் பொங்கல் அன்று ரிலீசாகும் என்று தெரிகிறது. டிசம்பர் 12ந் தேதி கோச்சடையான் ஆடியோ ரிலீசை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.


ரஜினி பிறந்த நாளில் கோச்சடையான் வராவிட்டாலும் அந்த இடத்துக்கு பரட்டை வருகிறார். 

ரஜினி கமல் இணைந்து நடித்த 16 வயதினிலே டிஜிட்டலாக மாற்றப்பட்டு அகன்ற திரையில் திரையிடப்படுகிறது. 

36 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி பரட்டை என்ற வில்லன் கேரக்டரில் நடித்த படம். "இது எப்படி இருக்கு?" என்கிற அவரது பேமசான பன்ஞ் டயலாக் இடம் பெற்ற படம்.



இதனை கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். டிசம்பர் 12 அன்று தமிழ் நாட்டில் 350 தியேட்டர்களிலும், பெங்களூரில் 55 தியேட்டர்களிலும், மும்பையில் 10 தியேட்டர்களிலும் திரையிடப்படுகிறது.

50 நாளை கடந்தார் சுமார் மூஞ்சி குமாரு



விஜய் சேதுபதி, நந்திதா, அஸ்வின், ஸ்வாதி நடித்த படம் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. 

கோகுல் டைரக்ட் செய்திருந்தார். இதில் விஜய்சேதுபதி சுமார் மூஞ்சி குமாராக நடித்திருந்தார். குமாரு இப்போது 50 வது நாளை கடந்து விட்டார். 

சுமார் 5 கோடி பட்ஜெட்டில் தயாரான படம் 20 கோடி வரை வசூலித்தாக கூறுகிறார்கள். 

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும் வரிசையில் விஜய் சேதுபதிக்கு இது நான்காவது ஹிட். 

சென்னையில் சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், ஆல்பட், பிவிஆர் காம்ளக்களில் ஒன்றிரண்டு காட்சிகளாக ஒடிக் கொண்டிருக்கிறது. 

மாயாஜாலில் மட்டும் மூன்று காட்சிகள், மகாலட்சுமி, சீனிவாசாவில் செகண்ட் ரவுண்ட். 

சென்னை தவிர மற்ற ஊர்களில் செகண்ட் ரவுண்டாக போய்க்கொண்டிருக்கிறது.

பிளான் பண்ணி பழிவாங்கிய ரகசிய நடிகை

குத்தாட்டம் போடும் ரகசிய நடிகை இப்போது போதை செடி பெயரை பெயருக்கு முன்னால் வைத்திருக்கும் காமெடி நடிகருக்கு ஜோடியாக பத்து நாட்கள் நடித்துவிட்டுப்போனார். 
ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம். கொடுக்கிற காசுக்கு யூஸ் பண்ணிக்குவோம்னு காமெடி நடிகர் ரகசிய நடிகையை கிஸ் பண்ணப்போக அது விவாகார வில்லங்கமாகி முடிந்தது. 

நடிகை நடித்துவிட்டு போனதும் அவர் தங்கியிருந்த நட்சத்திர ஒட்டல் பில்லை செட்டில் பண்ண சென்ற காமெடிக்கு ஷாக். 

ஓட்டல் பில், பார் பில் மட்டும் லட்சத்தை தாண்யிடிருந்ததாம். 

காமெடியை, ரகசிய நடிகை பிளான் பண்ணி பழிவாங்கி இருப்பதாக நொந்து போயிருக்கிறது யூனிட்.

இரண்டாம் உலகம் படத்திற்கு திடீர் சிக்கல்

இரண்டாம் உலகம் படத்தின் இயக்குனர் செல்வராகவனுக்கு, அட்வான்ஸ் தொடர்பாக, தயாரிப்பாளர்கள் சிலர் போட்டுள்ள, "கிடுக்கிப்பிடியால், படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. 

ஆர்யா, அனுஷ்கா நடிக்க, செல்வராகவன் இயக்கத்தில், "இரண்டாம் உலகம் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும், 22ம் தேதி வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 


இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சிலர், "எங்களுக்கு படங்கள் இயக்கி தருவதாக கூறி, இயக்குனர் செல்வராகவன் ஏமாற்றிவிட்டார்; 

நாங்கள் கொடுத்த பணத்தை அவரிடமிருந்து வாங்கி கொடுங்கள்; இல்லையேல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என, சினிமா தயாரிப்பாளர் சங்கம் மற்றும் சினிமா மற்றும் "டிவி சீரியல் தயாரிப்பாளர் கில்டிலும் புகார் அளித்துள்ளனர்.



இந்தியில், பிரபல சினிமா தயாரிப்பாளரும், இயக்குனருமான, ராஜ்குமார் சந்தோஷி உட்பட, சில தயாரி"ப்பாளர்கள், இந்த புகார்களை தெரிவித்து உள்ளனர். 

இதனால், "இரண்டாம் உலகம் படம், திட்டமிட்டப்படி படம் வெளிவருமா என்பது கேள்விகுறியாகி உள்ளது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் வீரம் - பொங்கல் ரிலீஸ் உறுதி

அஜீத் நடிக்கும் வீரம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. 
இன்னும் ஒரு சில நாட்களில் படப்பிடிப்பு முடிந்து விடும். "வீரம் நிச்சயம் பொங்கலுக்கு ரசிகர்களை மகிழ்ச்சியூட்டும்" என்று படத்தின் தயாரிப்பாளர்கள் வெங்கட்ராமரெட்டி, மற்றும் பாரதி ரெட்டி அறிவித்துள்ளனர்.

நவம்பர் 20 முதல் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் தொடங்குகிறது. 

படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். சந்தானம், பாலா, விதார்த், முனிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

பொங்கலுக்கு சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் வருவதால், பொங்கலுக்கு வருவதாக சொன்ன சில படங்கள் தள்ளிப்போகலாம் என்ற செய்தி பரவியதால் பொங்கலுக்கு வீரம் உறுதி என்பதை படத்தின் தயாரிப்பாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.

விருந்துக்கு தயாராகிறது பிரியாணி

பருத்திவீரன் நடிகர் நூற்றுக்கு நூற்றி ஐம்பது சதவிகிதம் நம்பியிருந்த ஆல் இன் ஆல் அழகுராஜா காலை வாரி விட்டதால் பேரதிர்ச்சியில் இருக்கிறார். 

தொடர் தோல்விகளை தழுவி வரும் அவரை தேற்றும் வகையில், ஓரங்கட்டி வைத்த பிரியாணியை பரிமாற தயாராகி வருகிறார்களாம். 

மேலும், அழகுராஜா ஓடி முடித்த பிறகு ஜனவரி மாதத்தில் அந்த படத்தை வெளியிட வேண்டும் என்று முன்பே முடிவெடுத்திருந்தனர். 

ஆனால், இப்போது அப்படம் திரையிட்ட சில நாட்களிலேயே தியேட்டர்களை விட்டு ஓட்டம் பிடித்து விட்டதால், பிரியாணியை உடனடியாக களமிறக்கும் வேலைகளை துரிதப்படுத்தியுள்ளனர். 

அதனால் டிசம்பரிலேயே படம் ரசிகர்களை சந்திக்க வருகிறதாம். இதனால் கிட்டத்தட்ட பிரியாணியை தான் கிண்டி வைத்திருப்பதையே மறந்து விட்ட வெங்கட்பிரபு, மீண்டும் பிரியாணியை சூடு பண்ணி சுவை குறையாமல் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க தயாராகி வருகிறார்.


இந்நிலையில், ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திற்கு முன்பே தயாரான பிரியாணியை தாமதமாக வெளியிடுவது பற்றி விசாரிக்கையில், பிரியாணியில் நிறைய கிராபிக்ஸ் வேலைகளில் இருந்தது அதனால்தான் ஜனவரியில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருந்ததாகவும், இப்போது அந்த வேலைகளில் முன்கூட்டியே முடிந்து விட்டதால் டிசம்பரில் திரைக்கு கொணடு வருவதாகவும் கூறுகிறார்கள்.

காமெடியரை கழற்றி விட்ட இயக்குனர்

பருத்திவீரனை வைத்து காமெடி படம் எடுத்த கல் இயக்குனருக்கு அப்படம் பெருத்த அடியைக் கொடுத்துள்ளதாம். 

இதனால் உடனடியாக வேறு ஒரு படத்தை எடுத்து ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியுள்ளார். 

இதனால் நடிகரும், தயாரிப்பாளருமான உதயமானவரை நேரில் சந்தித்து வாய்ப்பு கேட்க, அவரும் யாரை வேண்டுமானாலும் ஹீரோவாகப் போட்டுக்கங்க. நான் பைனான்ஸ் பண்றேன் என்று இயக்குனருக்கு ஊக்கம் கொடுத்துள்ளார். 

உடனே, ஆர்யமான நடிகருக்கு போன் போட்டு நடிக்குமாறு கேட்க, அவரும் ஓ.கே. சொல்லியிருக்கிறார். 

ஆனால், இம்முறை தன்னுடைய எல்லா படங்களிலும் நடித்த சந்தன காமெடி நடிகரை நடிக்க வைக்கப்போவது இல்லை என முடிவு எடுத்திருக்கிறாராம் இயக்குனர். இதற்கு பியூட்டி ராஜா கொடுத்த பெருத்த அடிதான் காரணம் என்கிறார்கள்.

எனக்கேற்ற சரியான ஜோடி நயன்தாரா தான் - ஆர்யா


ஆர்யா-நயன்தாராவை வைத்து ஏற்கனவே பல கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கையில், எனக்கு பிடித்த நடிகை நயன்தாரா தான், எனக்கு ஏற்ற ஜோடியும் அவர் தான் என கூறியுள்ளார் நடிகர் ஆர்யா. 

ஆர்யா-அனுஷ்கா நடிப்பில் நவ., 22ம் தேதி வெளிவர இருக்கும் படம் இரண்டாம் உலகம். வித்தியாசமான கதைக்களத்துடன் இயக்கியுள்ளார் செல்வராகவன். 

அனிரூத்தின் பின்னணி இசையுடன், ஹாரிஸ் ஜெயராஜின் முன்னணி இசையும் இணைந்துள்ளது. பிவிபி சினிமாஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது ஆர்யா பேசுகையில், என் கேரியரில் மிக முக்கியமான படம் இந்த இரண்டாம் உலகம். 

பி.வி.பி சினிமாஸ் பெரிய முதலீடு போட்டு, என்னை நம்பி தயாரித்துள்ளது. இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கும், செல்வராகவனுக்கும் என் நன்றி. 

நான் நடித்த நான் கடவுள், இரண்டாம் உலகம் போன்ற படங்கள் வருஷக்கணக்கில் எடுப்பதாகவும், அதுபோன்ற படங்களில் நீங்கள் ஏன் நடிக்கணும் என பலரும் என்னிடம் கேட்கின்றனர். 

பாலா, செல்வராகவன் போன்றோர் வருஷக்கணக்கில் படம் எடுக்கின்றனர் என்பதற்காக நான் வருத்தப்படவில்லை, ஒவ்வொரு காட்சியும் சரியாக வரவேண்டும் என்பதற்காக அவர்கள் அதிகம் உழைக்கின்றனர், அதை நான் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன் என்றார். 

மேலும் தனக்கு பிடித்த நடிகை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது எனக்கு பிடித்த நடிகை நயன்தாரா தான், எனக்கேற்ற சரியான ஜோடியும் அவர் தான் என்று கூறினார் அருகில் அனுஷ்காவை வைத்துக்கொண்டு.

புரளியை கிளப்பி பிழைப்பை கெடுக்காதீங்க

தமிழில் பரத் ஜோடியாக, யுவன் யுவதி என்ற படத்தில் நடித்தவர், ரீமா கல்லிங்கல். அதன் பின், தன் தாய்மொழியான மலையாளத்தில் பிசியாகி விட்ட ரீமா, பிரபல மலையாளப் பட இயக்குனர், அபு ஆஷிக்கை காதலித்து, சமீபத்தில் திருமணம் செய்தார். 

இதையடுத்து, இத்துடன், சினிமாவுக்கு முழுக்கு போடப் போகிறார் என, பேச்சு அடிபட்டது. இதைக்கேட்டதும், டென்ஷனாகி விட்டார், ரீமா. இப்போது தான், நாலு காசு சம்பாதிக்க துவங்கியிருக்கோம். 

அதற்குள், புரளியை கிளப்பி, பிழைப்பை கெடுத்து விடுவார்கள் போலிருக்கிறதே என, கோபத்தில், கத்த துவங்கி விட்டாராம்.இதையடுத்து, தொடர்ந்து நடிக்கப் போவதாக, பகிரங்க பேட்டி கொடுத்துள்ளார். 

திருமணத்துக்கு பின், பெரும்பாலும் நடிகைகளுக்கு, தொடந்து நடிப்பதற்கு, கணவரின் அனுமதி கிடைப்பதில்லை. 

ஆனாலும், என் கணவரும் ஒரு டைரக்டர் என்பதால், மீண்டும் நடிக்க நான் விருப்பம் தெரிவித்தபோது, அதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல், பச்சை கொடி காட்டி விட்டார். அதனால், வழக்கம் போல் நடிக்க தயாராகி விட்டேன் என்கிறார்.

நடிகையை மறக்க முடியாமல் கதறி அழும் நடிகர்

மலையாளத்து இயக்குனரின் மகனும், நடிகருமானவர் உயரமான விஸ்வரூப நாயகியை காதலிப்பதாக மீடியாவுக்கு பரபரப்பு பேட்டி கொடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். 

ஆனால், விஸ்வரூப நாயகியோ தாங்கள் காதலிக்கவில்லை என்று மறுத்து வந்தார். ஆனால் மலையாள நடிகரோ தான் மட்டும் நடிகையை காதலிப்பதாக கூறிவந்தார். நடிகை இவரது காதலை ஏற்க மறுத்ததுடன், இவருடனான நட்பையும் முறித்துக் கொண்டு போய்விட்டார். 

இந்நிலையில், நடிகை பிரிந்து போனது மலையாள நடிகரை மிகவும் மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது. அவரை மறக்கமுடியவில்லை என தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் கூறி கதறி அழுகிறாராம் நடிகர்.

ஆறே படத்தில் ஆடி கார் வாங்கினார் சிவகார்த்திகேயன்

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் மெரீனா படத்தின் மூலம் சினிமா நடிகர் ஆனார். 

அதன் பிறகு 3 படத்தில் சிறிய காமெடி கேரக்டரில் நடித்தார். மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என இவர் படங்கள் அனைத்தும் ஹிட் அடிக்க மெரீனாவில் 2 லட்சம் சம்பளம் வாங்கியவர் இப்போது 5 கோடி சம்பளம் வாங்குகிறார். 

தனது உயரத்தின் அடையாளமாக இப்போது 6 படங்களில் மட்டுமே நடித்துள்ள சிவகார்த்திகேயன் ஆடி கார் வாங்கி உள்ளார். 

அதில் உட்கார்ந்து போஸ் கொடுத்து அந்தப் படத்தை தனது பேஸ்புக்கிலும் வெளியிட்டுள்ளார்.


சினிமாவின் சிகரங்களை தொட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போதும் தனது பழைய அம்பாசிடர் காரைத்தான் பயன்படுத்துகிறார். 

6 படங்களில் நடித்த சிவா ஆடி காரில் பவனி வரப்போகிறார். சினிமா காட்டும் மாயாஜாலங்களில் இதுவும் ஒன்று.

நடிகையால் முட்டி மோதிய தயாரிப்பாளர், டைரக்டர்

மாமனார் மறுமகள் உறவு. அண்ணன் பொண்ணாட்டி கொழுந்தன் உறவு இப்படி வில்லங்கமான படம் எடுக்குற கடவுளின் இன்னொரு பெயரைக் கொண்ட டைரக்டர் இப்போது ஆஸ்திரேலியாவின் பிரபல விலங்கின் பெயரில் படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். 

பாதி படம் வளர்ந்த நிலையில் டைரக்டருக்கும், தயாரிப்பாளருக்கும் முட்டிக்கிச்சாம். இப்போது ஊட்டியில லட்சக்கணக்குல போட்ட செட்டு மழையில நனைஞ்சு வீணாகுதாம். 

இதனால தயாரிப்பு தன்னோட சங்கத்துலேயும், டைரக்டர் தன்னோட சங்கத்துலேயும் ஒருத்தர்மேல ஒருத்தர் புகார் கூறியிருக்காங்களாம். 

பிரச்சினை படத்தோட பட்ஜெட் சம்பந்தமானதுன்னு இவர்கள் புகார்ல சொல்லியிருந்தாலும், படத்துல நடிக்கிற ஒரு நடிகைதான் இந்த முட்டல் மோதலுக்கு காரணமாம்.

பஞ்சாயத்துக்கு வர இருக்கும் பட டைட்டில்கள்


தமிழ் சினிமாவுக்கும் தலைப்புக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். பிலிம் சேம்பர், தயாரிப்பாளர் சங்கம், கில்டு இந்த மூன்று அமைப்பிலும் டைட்டில் பதிவு செய்யலாம். 

இந்த மூன்று அமைப்புகளுக்கும் சரியான அண்டர்ஸ்டாண்டிங் இல்லை. அதனால் கண்டபடி தலைப்பு பதிவு செய்து காசு செலவு செய்து விளம்பரம் செய்த பிறகு படத்தின் டைட்டிலுக்கு பிரச்னை வந்து மாற்ற வேண்டியதாகிவிடும். சில நேரத்தில் கோர்ட் வரைக்கும் சென்றுவிடுகிறார்கள். 

சமீபத்தில் ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் எல்ரெட் குமார் தான் புதிதாக தயாரிக்கும் படத்துக்கு "இல்ல ஆனாலும் இருக்கு" என்று டைட்டில் வைத்து அறிவித்தார். 

கே.எம்.சரவணன் என்பவர் "இருக்கு ஆனா இல்ல" என்ற தலைப்பில் ஒரு படம் எடுத்து வருகிறார். இரண்டு படங்களுமே திகில் கதையை கொண்டது. 

அதேபோல ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கும் படத்திற்கு மதயானைக்கூட்டம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். 

ராட்டினம் தங்கசாமி எட்டுத்திக்கும் மதயானை என்ற படத்தை எடுத்து வருகிறார். இரண்டு படங்களின் தலைப்பும் விரைவில் பஞ்சாயத்துக்கு வரும்.

12 வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு பாட்டெழுதிய வைரமுத்து

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் அனைத்து படங்களிலும் வைரமுத்து இருப்பார். சில படங்களில் வேறு சில கவிஞர்கள் இடம்பெற்றாலும், அதிகபட்ச பாடல்களை வைரமுத்துதான் எழுதி வருகிறார். 

ஆனால், விஜய் நடிக்கும் படங்களுக்கு அதிகமாக ரகுமான் இசையமைக்காததால், விஜய் படங்களில் வைரமுத்துவின் பாடல்கள் இடம்பெறுவதும் குறைவாக உள்ளது. 


அதனால் சுமார் 12 வருடங்களுக்கு முன்பு விஜய் நடித்த யூத் படத்துக்கு பாடல் எழுதிய வைரமுத்துவிற்கு, அதன்பிறகு விஜய் படங்களுக்கு பாட்டு எழுதும் சந்தர்ப்பமே அமையவில்லை. 

ஆனால் தற்போது நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜில்லா படத்தில் மீண்டும் பாடல் எழுதியிருக்கிறார். 

டி.இமான் இசையில் வைரமுத்து எழுதியுள்ள கண்டாங்கி கண்டாங்கி என்ற பாடலை சமீபத்தில்தான் ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாடினார் விஜய்.



பாடலை பாடி முடித்தவர், பாடலின் இசையும், வரிகளும் அருமையாக உள்ளது. எனது லேட்டஸ்ட் ஹிட் பாடல்களான கூகுள் கூகுள், வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடல்கள் வரிசையில் இந்த பாடலும் பெரிய அளவில் ஹிட்டாகும் என்று தெரிவித்துள்ள விஜய், இப்பாடலைத்தான் தற்போது அடிக்கடி முணுமுணுத்துக்கொண்டிருக்கிறாராம்.

நான்கெழுத்து நடிகையை சூடேத்திய ஆவேசப்பேச்சு


சித்தியுடன் கோபித்துக்கொண்டு ஆந்திராவில் இருக்கும் பெற்றோருடன் ஐக்கியமாகி விட்ட அந்த நான்கெழுத்து நடிகையைப்பற்றி சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு படவிழாவில் காரசாரமான விவாதம் நடந்தது. 

அப்போது அவர் தன் படத்தை பாதியில் விட்டுச்சென்றதற்கு யாருமே நியாயம் கேட்கவிலலை என்று புலம்பினார் ஒரு டைரக்டர். 

அதைக்கேட்டு ஆவேசமான பைட் மாஸ்டர் ஒருவர், அது போன்ற நடிகையை செருப்பால் அடிக்கணும் என்று ஆவேசத்தின் உச்சிக்கே சென்றார். 

இந்த செய்தி மேற்படி நடிகையின் காதுகளுக்கு செல்ல, தன்னால் பாதிக்கப்பட்ட டைரக்டருக்கு ஏதாச்சும் நஷ்டஈடு கொடுத்து விடலாமா என்று யோசித்து வருகிறாராம். 

அதேசமயம், தனக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத அந்த பைட் மாஸ்டர் எதற்காக தன்னை செருப்பால் அடிக்க துடிக்க வேண்டும் என்று கொதித்துப்போன நடிகை, அதுசம்பந்தமாக வழக்கு தொடர திட்டமிட்டுள்ளாராம்.

இதையடுத்து, ஒரு நடிகையை படப்பிடிப்பு தளத்தில் கன்னத்தில் அடித்த இயக்குனருக்கு ஒரு வருடம் படம் இயக்கக்கூடாது என்று ரெட் கார்டு போட்ட சினிமா உலகில், செருப்பால் அடித்தால் எத்தனை ஆண்டுகளுக்கு ரெட் கார்டு போடுவார்களோ தெரியவில்லையே என்றும் இது சம்பந்தமான விவாதமும் கோடம்பாக்கத்தின் மூலை முடுக்குகளில் கிண்டலாக நடந்து கொண்டிருக்கிறது.

வசூலில் சாதனை படைக்கும் கிரிஷ் 3


ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்துள்ள கிரிஷ்-3 படம் வசூலில் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. முதல்நாளில் மட்டும் ரூ.25.50 கோடி வசூலாகியுள்ளது. 

'கோயிமில்கையா', 'கிரிஷ்' படங்களின் வெற்றியை தொடர்ந்து ஹிருத்திக் ரோஷனின் நடிப்பில் வெளியாகியுள்ள மற்றுமொரு பிரமாண்ட படம் தான் ''கிரிஷ்-3''. 

ஹிருத்திக்கின் தந்தையும், பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான ராகேஷ் ரோஷன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். 

ஹிருத்திக் ரோஷன் உடன் பிரியங்கா சோப்ரா, விவேக் ஓபராய், கங்கனா ரணாவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இப்படம் சுமார் ரூ.250 கோடி செலவில் மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படமாகும். படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் பல கோடி ரூபாய் செலவழித்து இருந்தனர். 

தீபாவளி விருந்தாக கிரிஷ்-3 படம் நவம்பர்-1ம் தேதி ரிலீஸானது. படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில் கிரிஷ்-3 முதல்நாளில் மட்டும் ரூ.25.50 கோடி வசூல் செய்துள்ளது என ஹிருத்திக் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து இப்படம் திரையிடப்பட்ட அனைத்து ஏரியாக்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக இருப்பதால் வசூலில், கிரிஷ்-3 ஒரு புதிய மைல்கல்லை எட்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

7 வருடங்களுக்கு பிறகு மோதிக்கொள்ள தயாராகும் அஜீத்-விஜய்

அஜீத்-விஜய் இருவரும் ஒரு கட்டத்தில் போட்டி மனப்பான்மையுடன் செயல்பட்டபோதும், கடந்த சில ஆண்டுகளாக நண்பர்களாகி விட்டனர். இதனால் அவர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி பரபரப்பு கூட்டும் நிகழ்வுகளும் இல்லாமல் போனது.


அந்தவகையில், 7 வருடங்களுக்கு முன்பு அஜீத் நடித்த ஆழ்வாரும், விஜய் நடித்த போக்கிரியும் ஒரே நேரத்தில் திரைக்கு வந்தன. இதில் ஆழ்வாரை விட போக்கிரியே வசூல் சாதனை புரிந்தது. 

அதுதான் அவர்கள் கடைசியாக மோதிக்கொண்டது. அதன்பிறகு அதற்கான சூழல் அமையவில்லையா? இல்லை போட்டியே வேண்டாம் என்று அவர்களாக விலக்கிக்கொண்டார்களா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.



இந்த நிலையில், தலைவாவைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் ஜில்லா பொங்கல் ரிலீசுக்கு வேகமாக தயாராகி வருகிறது. 

இதற்கிடையே ஆரம்பத்தை தீபாவளிக்கு வெளியிட்ட அஜீத், பொங்கலுக்கு வீரம் படத்தை வெளியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். இதனால், மீண்டும் அஜீத்-விஜய் மோதுவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது.



ஆனால் அப்படியொரு சூழ்நிலை உருவாகவே கூடாது என்று விநியோகஸ்தர்கள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்களாம். காரணம், இரண்டு பேரின் படமும் ஒரே சமயத்தில் தியேட்டருக்கு வந்தால், வசூல் பாதி பாதியாகி விடும். அதில் ஏதேனும் ஒரு படம் தோற்று விட்டால், அதை வாங்கியவர்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்படும் என்பதே அதற்கு காரணமாம்.



அதனால், இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் மோதவிடக்கூடாது என்பது சம்பந்தமாக சில விநியோகஸ்தர்கள் இப்போதே பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கி விட்டார்களாம்.

ஆரம்பம் - சினிமா விமர்சனம்

அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் படும் பேராசையால்தான் இந்தியாவில் ஆங்காங்கே வெடிகுண்டுகள் வெடிக்கின்றன. 

மேற்படி இவர்களது உதவிகள் இல்லாமல் தீவிரவாதிகள் இங்கு திடுக்கிடும் சம்பவங்கள் நடத்த முடியாது... எனும் உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லி வெளிவந்திருக்கும் ஆக்ஷ்ன் திரைப்ப(பா)டம் தான் அல்டிமேட்ஸ்டார் அஜீத்தின் ''ஆரம்பம்''!


எம்.எஸ்ஸி., கோல்டு மெடலிஸ்ட் ஆர்யா, கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மீடியாவில் பெரிய ஆளாக வேண்டும் என்ற லட்சியத்துடன் உடன் படிக்கும் டாப்ஸியை ஒருதலையாக காதலிக்கிறார். 

படிப்பு முடிந்ததும் டி.வி. நிருபர், தொகுப்பாளினி எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா... டாப்ஸி மீது லவ்வுன்னா லவ்வு அப்படி ஒரு லவ் ஆர்யாவுக்கு. சென்னையில் படிப்பு முடித்து மும்பைக்கு வேலைக்கு போகும் ஆர்யா, அங்கு உடன் படித்த நயன்தாரா, டாப்ஸியால், அல்டிமேட் அஜீத்தின் நட்பை பெறுகிறார். ஆர்யாவின் நட்பை தப்பாக்கி அவர் கையாலேயே பிரபல டி.வி. சேனல் ஒன்றை செயலிழக்க செய்யும் அஜீத், அடுத்து ஆர்யாவின் கணிப்பொறி திறமை மூலம் சுவிஸ் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் போட்டிருக்கும் அரசியல் புள்ளிகளுக்கும், அவர்களது காசுக்கும் குறி வைக்கிறார். கூடவே போலீஸிலும், அரசியலில் பெரும் பதவியிலும் இருந்து கொண்டு திருட்டுத்தனமாக தீவிரவாதிகளுக்கு உதவும் கருப்பாடுகளுக்கு கட்டம் கட்டுகிறார். 

இது ஏன்.? எதற்கு..? என்று நம்மை மாதிரியே புரியாமல், ஒரு கட்டத்தில் அஜீத்-நயன்தாரா கோஷ்டியை போலீஸில் மாட்டிவிடும் ஆர்யா-டாப்ஸி ஜோடி அவ்வாறு நடந்து கொண்டதற்காக அடுத்த கொஞ்ச நேரத்திலேயே வருந்துகின்றனர். 



காரணம், அஜீத் ராணா(த்ரிஷாவின் காதலரே தான் இதில் அஜீத்தின் நண்பராக கெஸ்ட் ரோலில் கொஞ்சநேரம் வருகிறார்...) இருவரும் வெடிகுண்டை செயலழிக்க செய்யும் மும்பை போலீஸ் உயர் அதிகாரிகள். 

உயிர் நண்பர்களான இவருவரும், ஒரு தீவிரவாத செயலை தடுக்க செல்கின்றனர். மயிர்கூச்செரிய செய்யும் அந்நிகழ்வில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து வெளிநாட்டினரை இருவரும் உயிர் சேதம் இல்லாமல் காபந்து செய்தாலும், ஒரு தீவிரவாதியின் துப்பாக்கி குண்டுக்கு அஜீத் கண் எதிரேயே ராணா உயிர் துறக்கிறார். 

அவரது உயிரிழப்புக்கு காரணம் தீவிரவாதியின் துப்பாக்கி குண்டுகள் மட்டுமல்ல..., அவர் அணிந்திருந்த தரமற்ற புல்லட் புரூப் ஜாக்கெட்டும் தான் என கண்டு அதிரும் அஜீத், அந்நிகழ்வால் தனது உயர் அதிகாரிகள் தொடங்கி, மத்திய உள்துறை அமைச்சர் வரை பகைத்து கொள்கிறார். அதனால் தன் நண்பனின் உயிரை இழந்து, தன் உயிரை துச்சமென மதித்து இந்திய கெளரவத்தை காப்பாற்றிய அஜீத்துக்கு துரோகி முத்திரை குத்தப்பட்டு பதவியும் பறிக்கப்படுகிறது. 

அதில் வெகுண்டெழும் அஜீத், ராணா குடும்பத்தில் எஞ்சிய நயன்தாரா மற்றும் நியாயமான போலீஸ் நண்பர்களுடன் சேர்ந்து மத்திய அமைச்சர் உள்ளிட்ட வில்லன் கோஷ்டியை எப்படி பழிதீர்க்கிறார்? ஆர்யா - டாப்ஸியின் காதல் என்னவாயிற்று? நயன்-அஜீத்தின் உறவு என்ன? 

சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்திய பணத்தை அஜீத்-ஆர்யா என்ன செய்தனர்? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது ''ஆரம்பம்'' படத்தின் பிரமாண்டமான மீதிக்கதை!



'அல்டிமேட் ஸ்டார்' அஜீத், ஏ.கே.எனும் அசோக்காக வழக்கம் போலவே தனக்கு ஈடு இணை யாரும் இல்லை எனும் அளவில் முதல் பாதியில் பொல்லாதவராகவும், இரண்டாம் பாதியில் போலீஸாகவும் பொளந்து கட்டியிருக்கிறார். 

பலபேரை ஏமாற்றி அவங்க இரத்தத்தை உறிஞ்சி சம்பாதித்த பணம் எனும் சுவிஸ் வங்கி கருப்பு பணத்திற்கு அவர் கொடுக்கும் 'பன்ச்' டயலாக்கில் தொடங்கி, க்ளைமாக்ஸில் ''சில சமயம் பழிவாங்கிதான் நியாயத்தை நிலை நிறுத்த முடியும்...'' என பேசும் 'பன்ச்' டயலாக் வரை ஒவ்வொரு டயலாக்கிற்கும் தியேட்டரில் ரசிகர்களின் விசில் சப்தத்தில் அதிர்கிறது. 

மற்ற ஹீரோக்கள் மாதிரி தான் மட்டுமே 'பன்ச்' டயலாக் பேசும்படி ஸ்கிரீன்பிளேவை இயக்குநர்களிடம் சொல்லி வடிவமைக்காமல் ஆர்யா, நயன்தாரா, அந்த ஊழல் அமைச்சர், அமைச்சரின் துபாய் அழகு பெண் உள்ளிட்ட எல்லோருக்கும் 'பன்ச்' டயலாக் வழங்கியிருக்கும் அஜீத்துக்கு ஒரு 'ஹேட்ஸ் ஆப்' சொல்லியே தீர வேண்டும். 



அஜீத் மாதிரியே அர்ஜூன் எனும் ஆர்யாவும் பொளந்து கட்டினாலும் படத்தில் காமெடியன் இல்லாத குறையை ஆர்யாவை வைத்து இயக்குநர் தீர்த்து கொண்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது! மாயா எனும் நயன்தாரா, அனிதா எனும் டாப்சி நாயகியரில் தொடங்கி 'ஆடுகளம்' நரேன், கிஷோர், கிருஷ்ணா என ஒவ்வொரு நட்சத்திரமும் பலே தேர்வு! பலே நடிப்பு!!



'ஆரம்பம்' படத்தின் ஆரம்பத்தில் மும்பையில் மூன்று இடங்களில் வெடிக்கும் வெடிகுண்டுகளுக்கும், அஜீத்துக்கும் என்ன சம்மந்தம்?, அதேமாதிரி போலீஸ் அதிகாரிகளுக்கு ஏ.கே. அஜீத் ஒரு முன்னால் போலீஸ் அதிகாரி என்பது தெரியாதது எப்படி? உள்ளிட்ட சில பல வினாக்களுக்கும், படத்தின் ஆரம்ப காட்சிகளில் டாப்சியை கவர 'குண்டு' ஆர்யா, குறும்பு எனும் போர்வையில் செய்த கோமாளித்தனங்கள் கொஞ்சம் இருட்டடிக்கப்பட்டிருந்தது என்றால் ''ஆரம்பம்'' மேலும் அமர்க்களமாக இருந்திருக்கும். ஆனாலும் ஓம் பிரகாஷின் பிரமாண்டமான ஒளிப்பதிவு, யுவன் ஷங்கர்ராஜாவின் பிரமாதமான இசை, விஷ்ணுவர்தனின் ஹாலிவுட் பட நிகர் ஆக்ஷ்ன் டைரக்ஷ்ன் எல்லாம் சேர்ந்து அஜீத்தின் ஆரம்பத்தை கோலாகலமாகவும், குதூகலமாகவும் ஆக்கியுள்ளன என்றால் மிகையல்ல!



மொத்தத்தில், ஆக்ஷ்ன் படங்களில் ''ஆரம்பம்'' - ''அபாரம் - அபூர்வம்''!!

பிசுபிசுத்துப்போன பிரியாணி - இயக்குனர் வேதனை


மங்காத்தா விளையாட்டுக்குப்பிறகு மேல்தட்டு ஹீரோக்கள் சிலரிடம் கால்சீட் கேட்ட அப்பட டைரக்டரை நம்பி யாரும் கதைகூட கேட்கவில்லை. 

அதனால் வேறு வழியில்லாமல் சகுனி நடிகரிடம் கதை சொல்லி ஓ.கே பண்ணினார். ஆனால், படப்பிடிப்பு தொடங்கியபோது அவர்களுக்குள் ஏகப்பட்ட பிரச்னை.

கதையை சொன்னபடி படமாக்கவில்லை என்று கொடி பிடித்த ஹீரோ, பின்னர் ஒரு நாளைக்கு ஒரு சீன் கூட எடுக்கமாட்டேன் என்கிறார். பட்ஜெட்டை பன்மடங்காகி விட்டார் என்று தொடர்ந்து டைரக்டருடன் மோதலில் ஈடுபட்டார்.

இதனால் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் சில மாதங்கள் படப்பிடிப்புகூட கிடப்பில் கிடந்தது. அந்த நேரம் பார்த்து சிவா மனசுல சக்தி டைரக்டரை சந்தித்த சகுனி நடிகர், அவர் சொன்ன கதை பிடித்து போனதும் உடனடியாக அவருக்கு கால்சீட் கொடுத்து நடித்தார். 

இதனால் பிரியாணி ஆறிப்போனால் அப்புறம் பிசுபிசுத்து விடும் என்று நடிகரை தன் பக்கம் இழுத்துப்பார்த்தார் மங்காத்தா. 

ஆனால், அவர் அசையவில்லை. விளைவு பிரியாணியை ஆறப்போட்டு விட்டு, இப்போது அழகுராஜாவை வெளியிடுகிறார்.

இதனால் பிரியாணி மீது வைத்திருந்த நம்பிக்கை போன நிலையில், மீண்டும் மங்காத்தா நடிகரிடம் கால்சீட் கேட்டார் பிரியாணி இயக்குனர். அவரோ, அடுத்தடுத்து வெவ்வேறு படங்களில் கமிட்டாகியிருப்பதால், இயக்குனருக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. 

அதனால், அடுத்தபடியாக தனது சென்னை-28, சரோஜா கூட்டணி நடிகர்களை வைத்து ஒரு காமெடி படத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறாராம் பிரியாணி பார்ட்டி.
Related Posts Plugin for WordPress, Blogger...