அமிதாப் பச்சனின் குரோர்பதி நிகழ்ச்சி சோனி டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கி உலகப்புகழ் பெற்ற நிகழ்ச்சி கோன் பனேகா குரோர்பதி.
இந்த நிகழ்ச்சி அமிதாப்பச்சனின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை பதித்தது. இதன் மூலம் சாமான்யர்கள் கூட லட்சங்களை பார்த்தார்கள்.
அதோடு அமிதாப்பின் கனிவான, பண்பே உருவான இன்னொரு முகத்தையும் உலகம் பார்த்தது.
இந்த நிகழ்ச்சி மீண்டும் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்க, சோனி டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
சோனி நிறுவனத்தின் துணைத்தலைவரும், மார்க்கெட்டிங் தலைவருமான தனிஷ்கான், இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
தினமும் சோனி டிவியில் இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது. இம்மாத இறுதிக்குள் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment