ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள மிகவும் எதிர்பார்ப்புக்குரிய துப்பாக்கி திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளிவரும் என்று தெரிகிறது.
முதன்முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் காஜல் அகர்வால். இந்தியாவின் முதன்மையான ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ள தயாரிப்பாளர் தாணுவும், படத்தின் உலகளாவிய வியாபார உரிமையை பெற்றுள்ள ஜெமினி நிறுவனமும் தீபாவளி வெளியீட்டை நோக்கி அசுர வேகத்தில் பணிகளை செய்த வண்ணம் உள்ளனர்.
இருந்தபோதும் படத்தின் தலைப்பு தொடர்பான கோர்ட் பிரச்னை இன்னும் முடியாமல் இருக்கிறது. இருந்தும் கோர்ட் பிரச்னைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என்று படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் அனைத்து பாடல்களும் முடிவடைந்த நிலையில் மிக விரைவில் இசை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment