ரஜினி படவிழாவில் அஜித்

பொதுவாக அஜித் பொது விழாக்களில்லோ, சினிமா விழாக்களில்லோ பங்கேற்பது மிகவும் அரிதான விஷயம். அவ்வளவு ஏன்...? தன் பட சம்பந்தப்பட்ட விழாக்களுக்கே அத்தி பூத்தாற் போல் தான் வருவார்.

அந்தளவுக்கு பிஸி மனிதரான அஜித், இப்போது ரஜினியின் ‌கோச்சடையான் ஆடியோ ரிலீஸ் விழாவில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி தனது மகள் சவுந்தர்யா இயக்கத்தில், கோச்சடையான் எனும் படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார்.

இவர்களுடன் சரத்குமார், ஆதி, ஷோபனா, ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவை ஜப்பானில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஜப்பானில் தமிழ் சினிமா படத்தின் இசை வெளியீட்டு விழா நடப்பது இதுதான் முதல்முறை. இதனிடையே இந்த ஆடியோ ரிலீஸ் விழாவிற்கு தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரை அழைக்க திட்டமிட்டுள்ளனர்.

அதில் ஒருவர் அஜித்குமார். ரஜினி படவிழா என்பதால் அஜித்தும் பங்கேற்க கூடும் என்று கூறப்படுகிறது.

தற்போது கோச்சதடையான் படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

கோச்சடையான் படத்திற்காக டைட்டானிக் படத்துக்கு பணியாற்றிய 3டி தொழில்நுட்ப கலைஞர்கள் சென்னை வந்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...