பெங்காலி ரசகுல்லா பிபாஷா பாசு, மிகவும் உற்சாகமாக இருக்கிறார். இதுவரை, கவர்ச்சியான வேடங்களிலும், குத்தாட்ட பாடல்களிலுமே, தலையை காட்டி வந்த பிபாஷா, "ராஸ்-3 படத்தில், அழுத்தமான, வேடத்தில் நடித்துள்ளார்.
இது தான், பிபாஷாவின் உற்சாகத்துக்கு காரணம். "இதுவரை, பல படங்களில் நடித்து விட்டேன். "ராஸ்-3 படத்தில், எனக்கு கிடைத்த அனுபவம், வேறு எந்த படத்திலும் ஏற்பட்டது இல்லை.
பழிவாங்கும் பெண்ணாக, நடிப்பது என்பது, மிகவும் சவாலான விஷயமாக இருந்தது. என்னுடைய உண்மையான கேரக்டருக்கு, முற்றிலும் மாறுபட்டு நடிக்க வேண்டியிருந்ததால், ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமப்பட்டேன். அப்புறம் சமாளித்து விட்டேன்.
ஷினாயா என்ற, அந்த கேரக்டருடன் மிகவும் ஒன்றி விட்டேன். இப்படி ஒரு வித்தியாமான, கதை அம்சமுள்ள படத்தில் நடிக்க வாய்ப்பளித்த, இயக்குனருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்என, பூரிப்பு விலகாமல் கூறுகிறார், பிபாஷா.
0 comments:
Post a Comment