தனுஷ் பாடிய, "வை திஸ் கொலவெரி... பாடல் உலகம் எங்கும் வரவேற்கப்பட்டது. "யூ டியூபில் சுமார் ஆறு கோடி முறை இந்த பாடலின் காணொளி பார்க்கப்பட்டு உள்ளது.
ஜப்பான் வரை இந்த பாடலுக்கு நடனமாடியவர்களின் காணொளிகள் வெளியாகின. தற்போது, இதை தூக்கிச் சாப்பிடும் வகையில், "காங்னாம் ஸ்டைல் (எச்ணஞ்ணச்ட் குtதூடூஞு) என்ற கொரிய பாடல் வெளியாகி உள்ளது.
வெளியாகி இரண்டே மாதங்களில் இதை, சுமார் 25 கோடி பேர் "யூ டியூபில் பார்த்துள்ளனர்! தற்போது, "யூ டியூபில் 24 லட்சம் பேர் இந்த பாட்டு பிடித்துள்ளது என குறிப்பிட்டு உள்ளனர்.
இதனால், "யூ டியூபில் மிகவும் பிடித்த பாடல்கள் பட்டியலில் இது முதல் இடத்தை பிடித்து உள்ளது. ஆனால், "யூ டியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடலின் காணொளி, அமெரிக்க பாப் பாடகர் ஜஸ்டின் பைபர் பாடிய, "பேபி என்ற பாடல்.
இது 78 கோடி முறை பார்க்கப்பட்டு உள்ளது! இந்த பாடலை, "காங்னாம் ஸ்டைல் முதல் இடத்தில் இருந்து வீழ்த்துமா என்று ஜஸ்டின் பைபரின் ரசிகர்கள், தற்போது, கவலையோடு கவனித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment